Sunday, March 4, 2018

பிடர்கொண்ட சிங்கமே பேசு - வைரமுத்து | கலைஞர்

பிடர்கொண்ட சிங்கமே பேசு
*
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக் கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே நீ
பேசுவாய் வாய்திறந்து
*

யாதொன்றும் கேட்க மாட்டேன்
யாழிசை கேட்க மாட்டேன்
வேதங்கள் கேட்க மாட்டேன்
வேய்ங்குழல் கேட்க மாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே நின்
குரல்மட்டும் கேட்க வேண்டும்
*
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக் கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே நீ
பேசுவாய் வாய்திறந்து

Voice: Vairamuthu
Piano: Anil Srinivasan
Cinematography: Gokula Krishnan R Vasugi, MFI
Video Editor: Mithran.B
Subtitles: Sharan Rajan (Subemy)

No comments: