விடியலை நோக்கி
கிணற்று மேட்டில் சாய்ந்து வானம் பார்த்தாள் சகினா. “அதே வானம்;;; ; அதே மேகம் ; அதே நிலவு.”
ஆனால்… இதே மாலை. ஆசர் வேளை; எவ்வளவு இன்பம் …. போன மாதம் எல்லாம் அத்தாவுக்கு அந்த ஜுரம் வரும் வரை. மூன்றே நாள் தனலாய்க் காய்ச்சல். மழை கொட்டிய அந்த விடியலின் கன்னி இருட்டில் தான் அவர்கள் வாழ்விலும் இருள் விழத் தொடங்கியது.
அன்றைய நாள், ஃபஜ்ரு பாங்கு சொன்னவுடன் எழுந்த சகினா, மழைத் தூறலைப் பொருட்படுத்தாமல் கிணற்றில் நீரிறைத்து சில்லென ஒலு செய்து, ஈரப்பாதம் தூசுபடாமல் குதிகால் பெருவிரல் ஊன்றி நடந்தவள் தந்தையின் கட்டிலருகே நின்றாள்.
“அத்தா எந்திரிங்க…”
எவ்வளவு ஜுரம், தலைவலியானாலும் ஒரு வக்த் தொழுகையைக் கைவிட்டு அப்துல்காதருக்குப் பழக்கமில்லை.
“நேரமாயிடுச்சாம்மா…” கேட்டபடி எழுந்தவர் “சகினா…!” என்றார் பதறியபடி.
“என்னாத்தா…?”
“என் கால் ரெண்டையும் அசைக்க முடியலியே…!” என்றார் கலவரமடைந்தவராக.
“தூங்கியிருக்கும்…!” சிரித்தபடி அவர் காலைத் தொட்டவள் திடுக்கிட்டாள். ஐஸ் கட்டிகளாய், கிள்ளினாலும் உணர்வில்லா மரக்கட்டைகளாய்…!
டாக்டரிடம் ‘ஓட’, வாதம் அடித்துவிட்டது என்றார்.
யார் யாரிடமோ சொல்லி, தினம் ஒரு டாக்டரிடம் காரில் அழைத்துப் போனதில், மகள் கல்யாணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த பணம் கரைய, அம்மாவும் கரைந்தாள்; ; ஓய்ந்தாள்!
அந்த ஊர் ஒரு ரெண்டுங்கெட்டான். தஞ்சை ஜங்~னை ஒட்டிய அல்லது சேர்ந்த முஸ்லிம்கள் நிறைந்த கிராமம். அப்துல் காதர் அங்கு பிரபல டெய்லர்.
வசிக்கும் வீடு சின்னதானாலும் ஜங்~ன் அருகே அவர் தொழில் பார்க்கும் சொந்தகடை சற்றுப் பெரியது தான்.
இவருக்குக் கீழே 4 டெய்லர்கள் வேலை செய்தார்கள். கை சுத்தம் ; நேர்மை! ஜங்~ன் மட்டுமில்லமால் டவுனிலும் அவருக்கு கஸ்டமர்கள். பொழுதுபோக்காய் எம்ப்ராய்டிங்கும் செய்ய, வாழ்க்கை கூட்ஸ் ரயிலாக இல்லாவிட்டாலும் கட்டை வண்டியாக இல்லாமலிருந்தது.
மூத்த பெண் சகினா தவிர, இப்போது 11 தேறியிருக்கும் முஜிப், நாலாம் கிளாஸ் நசீரா ஆகியோர் ஈன்ற செல்வங்கள்.
யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் சகினாவை ஜங்~ன் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படிக்க வைத்து, பின் அதே ஸ்கூலில் டைலரிங் கிளாஸ் சேர்த்து, அவளும் எல்லா நவீன டைலரிங்கிலும் தேர்ச்சி பெற…
அப்போது தான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது. சின்ன ஜவுளிக் கடைகளில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு முடிந்த துணி அவர்களிடமே எடுத்து, ஆர்டர்படி அதை ரெடிமேட் ஆடைகளாகத் தைத்துத் தருவது தான் அந்த ஐடியா.
பணச் செலவு இல்லை. வருடத்திற்கு ஆறேழு முறை ஆர்டர் கிடைத்தாலும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை கணிசமான பணம் வருமே…
எப்படியோ, யார் சிபாரிசோ… டவுனில் 3 சிறு கடைகளில் ஆர்டர் பிடித்த ஆறே மாதத்;தில் அவளுள் பெருமூச்செழ,
உள்ளிருந்து கேட்ட ஆண் குரலில் சிந்தனை கலைந்து எழுந்தாள்.
“டவுன்லயா இருக்கு கடை? நம்மூர்தானே. முடிவா பத்தாயிரம் தரலாம்…அப்புறம்…தையல் மெ~pனெல்லாம் இனிமே வீட்ல வச்சிக்கிட்டு என்ன செய்யப்போறீங்க… அதையும் நானே எடுத்துக்கிட்டா ….” கல்லு வீட்டு கபூர் தான் அம்மாவிடம் கறாராய்.
“சரி…! ஏதோ கொஞ்சம் பார்த்து செய் தம்பி” அம்மா.
அதிர்ந்த சகினா கதவோரம் போனாள்.
“அம்மா கொஞ்சம் உள்ள வர்றியா…?
என்னம்மா இது … கடைய விக்கணும்னு! இப்ப என்ன?
“விக்காம என்ன பண்ண? மூத்தது ஆணா பெத்திருக்கேன், கடை ஆளுங்க போயாச்சு. விசே~ காலம் நெருங்குறதாலே நேத்துக்கூட அந்த மூணு ஜவுளிக்கடையிலேந்தும் துணி அனுப்பட்டுமான்னு … ஆர்டர் லட்டர் வந்தது தெரியுமில்லே…?”
“அது சரிம்மா… இது அந்த காலத்துலே தாத்தா வாங்கிப் போட்ட இடம், மனையே அரை லட்சத்துக்கு மேலே.. அத்தா கிட்ட கேட்காம… சரி, இந்தப் பணத்த வச்சி என்ன செய்வே?”
“உங்கத்தா வைத்தியச் செலவு பார்த்துட்டு, மிச்சத்துல உனக்கு ஏதாச்சும் நகை நட்டு… அப்புறம்…”
அவளுக்குச் சிரிப்பு வந்தது. பாவம்! அப்பாவி அம்மா!
“முதல்ல அந்த ஆளை அனுப்பிட்டு வாம்மா…” அவள் குரலில் உறுதி!
“ஏண்டி அந்தத் தம்பிய போகச் சொன்னே…!”
“கடைய நான் நடத்த … ஆர்டருக்குத் துணி தைக்க…”
“என்னது…! பொம்பளப்புள்ள… அதுவும் முஸ்லிம் பொண்ணு கடைலே ஒக்காரப் போறியா…?”
“இப்படிச் சொல்லிச் சொல்லியே வீட்ல அடைச்சாச்சி நம்ம தெரு முனைல கடை. பக்கத்துல கூட வீடுங்க தானே. ஊரு உறவு ஜனங்க ஏதாச்சும் சொல்லிட்டா என்ன செய்யிறதுன்னு பயப்படுறே …. அதானே… அத்தாவுக்கு வைத்தியம் பண்ணப் பணம் அவங்க தரட்டும். முஜிப், நசீராஸ்கூல் பீஸ் அந்த ஜனங்களே கட்டட்டும். இன்னும் ஒரு வாரம் தாங்காது அரிசி பானை அரிசி… அப்புறம் மளிகை லிஸ்ட் போட்டுத் தர்றேன்… அதையும் அவங்களே வாங்கித் தரட்டுமே…!”
“சகினா…”
“தயவு செய்து மறுப்புச் சொல்லாதம்மா… இந்த ஒரு வரு~ காண்ட்ராக்ட் பிடிக்க ரெண்டு வரு~மா அத்தா அலைஞ்சத நான் வீணாக்கப் போறதில்ல…”
அம்மா பேசாமல் போக, கூடத்து ஓரத்து கட்டிலிலிருந்த தந்தையிடம் வந்தாள்.
“நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டீங்களாத்தா…?- பதில் பேசாவிட்டாலும் நீர் வழிந்த அவர் கண்களிலிருந்து ஆயிரம் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
வெள்ளை புர்கா இருபுறமும் வெண்புறாக்களாய் சாமரம் வீசிப் பறக்க, தெருவில் நடந்த சகினாவைப் பார்த்து அந்த ஊர் நாக்குகள் கதவு நீக்கலிலும் ஜன்னல் இடுக்கிலும் நின்று நர்த்தனமாடின.
மிதிலா, சஜினா, பர்வீன் என 3 ஜவுளிக் கடைகளிலிருந்தும் வந்திறங்கிய துணி பார்சல் அரை டெம்போ இருப்பதைக் கண்டு சகினா மலைத்தாள்.
ஆர்டர்படி அவற்றை ஒரு மாதத்திற்குள் தைக்க ஒண்டியாய் முடியுமா?
அன்று மாலை, அவளின் பால்ய தோழி கரீமாதன், தாய் சாராவுடன் வந்தாள்.
“நீ தையல் கடை நடத்தப் போறியாமே… எனக்கும் என் தங்கச்சி நஜிமாவுக்கும் கூட எல்லா மாடர்ன் டைலரிங்கும் தெரியும். வீட்ல க~;ட ஜீவனம்தான். நாங்க வேலைக்கு வரட்டுமா?...” என்று கேட்டாள்.
“அல்ஹம்துலில்லாஹ்..” மனதுள் நன்றி கூறியவள் மகிழ்வுடன் தலையசைத்தாள்.
அன்று திங்கள்கிழமை, பிஸ்மி சொல்லி கடை திறந்த சகினா மெ~pன் உறை பிரித்தாள்.
முதல்; தேதி! ஓடி வந்தாள் சகினா. “இங்க பாரும்மா… எல்லாக் கடைகள்லேயும் சேர்த்து 2600 ரூபா வந்திருக்கு” அடர்ந்த மரத்தினூடே புகுந்த ஒளிக்கதிராய், மகிழ்ச்சிப் பொங்கப் பணக் கவரை காட்டிய சகினாவை “சொன்னது சாதித்து விட்டதே இந்தப் பெண்”. எனத் தாய் பாத்திமா வியந்தாள்.
“இந்தப் பணத்தில்தான் கரீமா, நஜிமாவுக்கு சம்பளம், அத்தா மருந்து செலவு. முஜிப், நசீரா ஸ்கூல் பீஸ். இதரவீட்டுச் செலவுகள்… “ம்!” - பனி மூட்டமாய் கவலைகள்!.
அடுத்த 3 மாதமும் தையல் ஆர்டர் வரவில்லை. பின் கிடைத்த ஆர்டரிலும் இவள் அனுப்பச் சொன்ன துணியில் பாதி வர, “என்னவாயிற்று… சரக்கு எடுத்து வந்தவர்கள் இப்போது பெண்கள் தைப்பதாக சொல்லியிருப்பார்களோ!”- குழம்பினாள்.
வேலை இல்லாமலே நாட்கள் வெறுமனே எண்ணப்பட… அத்தாவின் ரெகுலர் கஸ்டமர்கள் கூட எட்டிப் பார்க்கவில்லை. ‘தேவை ஏற்பட்டால் கூப்பிடுகிறேன்’ என கரீமா, நஜிமாவை அனுப்பியவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
குடும்பம் ஒற்றைச் சக்கர வண்டியாய் நொண்டியடிக்க, ‘பரவசத்தில் பனிமலையேறி உருகியபின் தத்தளிக்கும் நிலை’ ஏற்பட்டது சகினாவுக்கு.
இடையில் நோன்புப் பெருநாள் வர, ஊரில் வேறு டைலர் இல்லாததால் ‘கடனே’ என்று இவளிடம் வந்த நிறைய துணிகள் மகிழ்வூட்டியது.
பெருநாள் இரவு! ஊர் மொத்தமும் பிறை தேட, இவளும் அண்ணாந்தாள். அதே வானம்-மேகம் நிலவு… மனதிலும் அதே வெறுமை.
விடாமல் துணி தைத்தால் கால் கடுக்க, மன வலியும் சேர்ந்தது.
“உன்னால என்ன முடியும்?...” அலட்சியம் + கோபப் பார்வையில் அம்மா.
“கடைல உக்கார வெக்கமா இல்லை?...” வெறுப்பூஅறுவெறுப்பில் ஊர்ஜனம்.
“என்னால முடியாதாத்தா…புல்வெளின்னு நெனச்சி நாணல் போர்த்துன குளத்துல எறங்கிட்டாலும் அதையும் நீந்திக் கரையேற எங்கிட்ட தைரியமிருக்கு” நம்பிக்கை கலந்த வேதனையுடன் தந்தையருகே அமர்ந்து அவர் சொன்னாள்.
“கரெக்டும்மா…குருவிக் குஞ்சுக்கெல்லாம் பொறந்தவுடனே றெக்கை மொளச்சா எப்படி… இதுதானே ஆரம்பம். இப்ப ஒன்னும் விழா சீசன் இல்லியே, அடிக்கடி ஆர்டர் கிடைக்க” ஆதரவாய் அவர் தேற்றினார்.
“இல்லத்தா… இன்னும் பெரிய, பெரிய ரெடிமேட் ஹாலோட, அதுவும் இந்த வட்டார ஃபேமஸ் ரிதம் ரெடிமேட்ஸ் ஒன்னோட ஆர்டர் கிடைச்சா போதும், வரு~ம் முழுக்க கவலையில்லை. அதுக்குத்தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.
அவங்களுக்கு, இந்தியா முழுக்க கடைகள். வெளிநாட்டுக்கு கூட ஏற்றுமதி பண்றாங்க…”
“என்ன, ரிதம் ரெடிமேடா…! அதோட தஞ்சாவூர் மேனேஜர் மகன் சலீம் கூட என் நெருங்கிய நண்பன் தான் கிளாஸ்மேட். அதன் மூலமா நான் முயற்சி பண்ணவா?” அருகிலிருந்த முஜிப் ஆர்வத்துடன் கேட்டான்,
மறுநாள் சகினா எழுதித் தந்த விண்ணப்பம், தைத்த ஆடை மாதிரிகள் சில – அழகழகாய் அவள் வரைந்த ரெடிமேட் ஆடை வரைபடப் பிரதிகள் ஒரு கட்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு முஜிப் கிளம்பினான்.
அன்று மாலையே மலர்ந்த முகமாய் வந்த முஜிப் பைப் பார்த்ததுமே அவளுள் பனிச்சாரல்.
“உள் டிசைனெல்லாம் பார்த்து அசந்துட்டாரு மானேஜர். ரெடிமேட் தைக்க துணி எடுத்துத்தர ஒத்துக்கிட்டாங்க… நம்ம டிசைனுக்கு டைலரிங் வட்டாரத்துல் உள்ள மதிப்பத் தெரிஞ்சுக்கிட்டுப் போகப் போக கமி~ன் கூட்டி, அப்புறம் அவங்ககே ஸ்பெ~லா குவாலியர்லேந்து மில்துணி வரவழைச்சும் கொடுப்பாங்கலாம்…”
ஆர்வத்துடன் சொல்லி வந்தவன் திடீரெனச் சோர்ந்தான். “ஆனா ஆறுமாசம்… எடுக்கற துணிக்கு மூனுல ஒரு பங்கு பணம் நாம தரணுமாம். புணத்துக்கு நீ என்ன பண்ணுவே சகினா?...!” கவலையுடன் முஜிப் கேட்டான்.
பதில் பேசாமல், இருந்த ஒரே நகையைக் கழற்ற காதில் கை வைத்த சகினா, உள்ளே வியந்தாள்.
“இந்த முஜிப் என்னை விட 3 வயது இளையவன். 16 வயது பிளஸ் டூ மாணவன், அதற்குள் எவ்வளவு பொறுப்பு…!”
2 ஆண்டுகள் ஓடின.
ரிதம் ரெடிமேட் மட்டுமில்லாது, வேறு சில பிரபல நிறுவனங்களின் ஆர்டர்களும் சகினாவைத் தேடி வர, மோட்டார் பொருந்திய தையல் மெ~pன், பட்டன் மெ~pன் எனக் கடை நவீனமாய் விரிவடைந்தது. இறையருள் பொங்கிப் பிரவாகித்தது.
இப்போது சகினாவுக்கு கீழே 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள்.
முதலில் கைகொடுத்த கரீமா, நஜீமா, இப்போது இவளின் உதவியாளர்கள்.
அன்று குறை கூறியவர்கள் இன்று தங்கள் பெண்ணையும் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று நயமாய்ப் பேசினர்.
பல ஆயிரம் செலவு பண்ணி ஒரு நல்ல ஸ்பெ~லிஸ்ட் டாக்டரிடம் அத்தாவைக் காட்டினாள்.
இப்போது காலில் உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. சிறு பிள்ளையாய் சுவர் பிடித்து தளர் நடை நடந்தார்.
“இன்னும் ஆறே மாசத்தில் ஓடுவேன்ம்மா… அப்ப எனக்கும் உன் கடையில வேலை தர்றியா…?” என அத்தா கேட்க, அவளுக்குச் சிரிப்பு வந்தது.
இந்த 22 வயது பெண்ணுக்குத்தான் எத்தனை விவேகம்” அம்மா அதிசயிக்க, கடமையை ஓரளவு நிறைவேற்றிய திருப்தியில் அவன் மனம் சிறகடித்து.
முஜிப் இப்போது அவன் விரும்பிய எம்.பி.பி.எஸ்.ஸில் 2-ம் வருடம். நசீரா 6-ம் வகுப்பு. அன்று மாலை எப்போதும் போல் அக்காவை அழைக்க கடைக்கு வந்த முஜிப்” “வீட்டுக்கு வா, உனக்கொரு குட் நியூஸ்’! எனப் பொடி வைத்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
வாசலில் வரவேற்கும் அம்மா! சந்தோசப் பூரிப்பில் சாய்ந்திருந்தார் தந்தை.
வழக்கம் போலவே அத்தா விடம்… “என்னத்தா…” என்றாள்.
“ஒண்ணுமில்லேம்மா ; நம்ம ரிதம் ரெடிமேட் மானேஜர் இல்ல? அவர் பையனுக்கு அதாவது நம்ம முஜிப் ஃபிரண்ட் சலீமோட அண்ணனுக்கு உன்ன பெண் கேட்டு மதியம் வந்துட்டுப்போனாங்க. பையன் நல்ல படிப்பு. தொழுகையாளி’ அதே கடையில் இன்னொரு பிரிவு மானேஜர் தன் பிஸினசுக்கு உதவியான பெண்ணோட தான் “நிக்காஹ்னு சொன்னதால இங்க வந்திருக்காங்க… அப்புறம் நீ இதே ஊர்ல இந்த வேலைய தொடர்ந்து செய்யறதுலேயும், அவங்களுக்கொன்னும் ஆட்சேபம் இல்லையாம்…” வாப்பா விவரித்துக் கொண்டே போனார்.
“அப்படியே அக்கா கல்யாணமாயி போயிட்டாலும் நான் கடைய நடத்த மாட்டேனா என்ன?”
அருகிலிருந்த நசீரா சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
‘அதே வானம்…! அதே மேகம்…! அதே நிலவு…! இப்போது தான் எவ்வளவு இன்பம், கணவர் தோளில் சாய்ந்தபழ வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் சகினா,
---------------------------------------------------------------
விடியலை நோக்கி
ஆசிரியர் : பி. எம். ஆர். ஹாஜிரா பானு
சொந்த ஊர் : நீடூர், நாகை காயிதெ மில்லத் மாவட்டம்.
படிப்பு : பள்ளி இறுதி வகுப்பு
இலக்கியப் பங்களிப்பு : முஸ்லிம் முரசில் முதல் சிறுகதை, தேவி, ராணி, விகடன்,
மங்கையர்மலர், கோகுலம் போன்ற இதழ்களில் கவிதை,
துணுக்குகள்.
இவரது சகோதரி பி.எம்.ஆர். ஆமினா பீவியும், ஒரு
படைப்பிலக்கியவாதி.
No comments:
Post a Comment