Tuesday, March 27, 2018

உலமாக்கள் ஆலோசகர்களாக திகழ வேண்டியது காலத்தின் தேவையாகும்

மௌலவி. ஏ.ஆர்.எம். மஹ்ரூப்

நபிமார்களின் வாரிசுகள் என்ற வகையில், உலமாக்களின் பொறுப்பு மிக முக்கியமானது. நன்மையை ஏவுவதும் தீமையைத்தடுப்பதும், அதன் அடிப்படையில் சமூகச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதும் இவர்களது கடமையாகும்.  இதனை இஸ்லாமியப்பணி எனவும் தஃவாப் பணி எனவும் அழைக்கப்படுகின்றது.

தஃவாப்பணியின் எல்லை மிக விரிவானது என்பதை நாம் அறிவோம்.  குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவது, சொற்பொழிவாற்றவது, மேடைப்பிரசங்கம் செய்வது, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாமிய போதனைகளை விளக்குவது, மார்க்கத் தீர்ப்பு வழங்குவது, நூல்கள் எழுதுவது, பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றை வெளியிடுவது, தஃவா அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அனைத்து விடயங்களும் தஃவாப் பணியில் அடங்கும்.



நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் விடயம், தஃவாவுடன் சம்பந்தப்பட்ட ‘ஆலோசனை கூறல்’ எனும் ஊழரளெநடடiபெ பற்றியதாகும்.
ஆலோசனை வழங்கல், ஆறுதல் படுத்துதல் போன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன.  ஒருவருடைய பிரச்சினைபற்றி ஆழமாக ஆராய்ந்து, பொருத்தமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதை இச்சொல் குறித்து நிற்கின்றது.
இப்பதம், மேற்குலகில் மிகப் பிரபல்யம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  நமது நாட்டில் சுனாமி ஆனதத்தின் பின்னர் தான் ஓரளவு பிரபல்யமாகி உள்ளது.  சுனாமி ஆனதத்தின் அழிவகளாலும், இழப்புக்களாலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் உளரீதியான பாதிப்புக்குள்ளாகினர்.  இத்தகையோருக்கு ஆறுதலும் ஆலோசனைகளும் வழங்கும் வகையில் பொது நல நிறுவனங்கள் பல  செய்கின்றன.  இதன் காரணமாக உளரீதியாகப் பாதிப்புக்குள்ளான பலரை குறிப்பாகச் சிறுவர் சிறுமியரை. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வரக்கூடியதாக உள்ளது.

இவ்வாறே, வேறு பல காரணங்களால் உளப்பாதிப்புக்குள்ளாகி விரக்தியுடன் காலத்தைக் கழிக்கும் பலரும் சமூகத்தில் உள்ளனர்.  தமது பிரச்சினைகளுக்கு ஆறுதலோ ஆலோசனையோ கூறுவோர் யாரும் இல்லையா? என்று அங்கலாய்ப்போரும் கூட இருக்கின்றனர்.  மற்றும் சிலர், போதைப்பொருள், மதுப்பழக்கம் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இவற்றிலிருந்து விடுபட வழி இல்லையா? ஏன்று ஏங்குகின்றனர்.  இத்தகையோருக்கு வழிகாட்டும்  முறை சாலச் சிறந்தது.

பெரும்பாலும் பொதுமக்கள், மார்க்க சம்பந்தமான விடயங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவே உலமாக்களை அணுகுகின்றனர்.  தமது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கோ குடும்பப் பிரச்சனைகளுக்கோ இவர்களை அணுகுவது குறைவு.  பெரும்பாலான உலமாக்களும்கூட தனிநபர்விடயங்களில் அக்கறை  காட்டுவதில்லை.  சமூகப் பிரச்சினைகள் பற்றி குத்பாக்கள், பயான்கள், கருத்தரங்குகள் போன்றவற்றில் பொதுப்படையாகப் பேசுவதையே பரவலாகக் காண முடிகின்றது.

நாம் இங்கு வலியுறுத்த விரும்புவது, உலமாக்கள் பொதுமக்களின் பிரச்சனைகளை இனம் கண்டு, தனிப்பட்ட வகையில் அவற்றை அணுகி, அவற்றைத் தீர்க்கவழிகாட்ட வேண்டும்.  இது பயனுள்ள நடவடிக்கையாகும்.  சட்டவிரோத நடவடிக்கைகளிலும் சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவோரையும் கூட தனிப்பட்ட முறையில் கண்டு நேருக்கு நேர் கதைப்பதன் மூலம் அவர்களை நேர்வழிப்படுத்த நிறைய வாய்ப்பு உண்டு.

ஆலோசனை வழங்கல், ஆறுதல் கூறல், உபதேசித்தல் போன்ற பொருள்களைக் கொண்ட சேவையை, மேல்நாட்டவர் அண்மைக் காலங்களில் தான் சமூக நல விடயங்களில் பயன்படுத்த தொடங்கினர்.  ஆனால் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இம்வம்சத்தை நிறையக் காண முடிகின்றது.  நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்” ஹரீஸ{ன் அலைக்கும்… (உங்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்) என வர்ணிக்கின்றான்.   மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும், துன்பங்களைத் துடைக்க வேண்டும் என்பதிலே நபி (ஸல்) அவர்கள் எப்போதும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாக விளங்கினார்கள்.

No comments: