படுக்கையில் படுக்கவே
பயமாயிருக்கிறது
நடுக்கடலில் தத்தளிக்கும்
படகென
மிரட்டுகிறது மெத்தை
மனைவி
மெளன ஈட்டி
எனும்
பயங்கர
ஆயுதம் தறிக்கும் காலங்களில்
இயல்பானவை யாவும்
பளு ஏற்றிக் கனக்கின்றன
பிள்ளைகள் அறையோடு
பெற்றவள் சேர்ந்துவிட
தனித்து விடப்பட்டத்
தகப்பனுக்கோ
தாயன்புத் தேவைப்படுகிறது
இந்த
இவளாலான
நிசப்தத்தை விடக் கொடுமையானதல்ல
சப்தமாக
நாலு வார்த்தைகளாலான வசவு
சொல்லடிகூட
சகிக்கலாம் பெண்டிரே
மெளனமாய் -எம்மை
மென்று துப்பாதீர்!
No comments:
Post a Comment