Thursday, March 22, 2018

வறுமை

வறுமை நிலை யாருக்கும் வரவேண்டாம்
வறுமை வருவதற்கு ஆட்சி செய்பவரும் பொறுப்பாளர் ஆவர்
தனி மனிதனின் தரங்கெட்ட போக்கும் வறுமைக்கு கொண்டு வரும்
வறுமை கொடியது
வறுமையின் கொடுமை வராமல் இருக்க வேண்டும்
அதிலும் கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை!
பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

-ஔவையார்-
வறுமை வழி தவறும் மனிதத்தை உருவாக்கிறது
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது என்ற நிலைக்கு வர வேண்டாம்
கொடிய வறுமை உயிருக்கே உலை வைத்துவிடுகிறது.
உலகில் சுமார் 100 கோடி மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
வறுமையால் வாடும் மக்கள் தவறான செயல்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்
வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்தக்கூடிய செயல்கள், பல இருக்கின்றது
வறுமையால் தன்னை அழித்திக் கொள்ளும் நிலைக்கு வருவது மடமை
அதிலும் வளமான வாழ்வு வாழ்ந்தவர் வறுமை வந்து விடுவதும் மற்றும் வட்டிக்கு வாங்கியோர் கடன் தொல்லையால் அவதிப்பட்டோர் அந்நிலைக்கு வருவதனை இக்காலத்தில் பார்க்க முடிக்கின்றது
வானம் காய காலத்தே மழை பெய்யாத நிலையில் விவசாயத்தில் மிகவும் பாதிக்கப்படுவோர் நிலை மிகவும் பரிதாபகரமானது அதில் ஒரு சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்
தற்கொலையை அவசியம் தற்கொலை செய்ய வேண்டும்
அரசு அலுவலங்களில் லஞ்சங்கள் தலைவிரித்தாடுகின்றது
ஆட்சி செய்பரும் இதற்க்கு காரணமாக இருக்கின்றனர்
ஆயிரம் ரூபாய் வரவு வந்தால் இரண்டு ஆயிரம் ரூபாய் செலவுகள் வருவது என்ற போக்கும் மாற வேண்டும் .செல்வ வளம் இல்லாமல் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகின்றது சேமிக்கும் வழி அறிய வேண்டும் .அது அவசரநிலைக்கு உதவும் .அரசே அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கி விடுகின்றது
செலவ நிலையில் உள்ள குடுபத்தில் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்
செலவ குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் வறுமை அறியாது செலவு செய்வதோடு செல்வத்தின் அருமை அறியாது தங்கள் வாழ்வை விரயமாக்கி விடுகின்றனர் .
இறை நம்பிக்கையற்ற நிலை வந்ததால் சிலர் பாவமான செயல்களில் ஈடுபட்டு நாசமாகின்றனர்
அவர்களை சிந்திக்க முடியாமல் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது சாராயம் குடிக்கும் பழக்கமாகும் .
அரசே அந்த வியாபாரம் செய்து மக்களை மேலும் கெடுக்க வைக்கின்றது .
குடியால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் தாழ்ந்த நிலையில் வந்து விடுகின்றனர் .
ஆதிக்க வர்க்கம் உயர் குடிமக்கள் இதில் இப்பொழுது இந்த பழக்கத்தில் வராமல் இருக்கலாம் ஆனால் இந்த தொற்று நோய் அவர்களயும் ஒரு காலத்தில் ஒட்டிகொள்ளவே செய்யும்.
சாராய தொழிலை அரசு அவசியம் நிறுத்தியே அக வேண்டும்
வறுமை நீங்க உழைப்பதோடு இறைவன் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள்
இந்த இறைவசனத்தை ஓதுவதும் உயர்வு சலவாத்தும் ஓதுங்கள்
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வறுமை நீங்கும் ஏன்ற நம்பிக்கையும் வையுங்கள்
நபி அவர்கள் சொன்னார்கள்
எனக்கு எந்த தீங்கும் நேராது இருக்க நான் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் சூரா இக்லாஸ். ஃபலக். நாஸ் . இந்த மூன்றையும் ஒவ்வொன்றையும் மூன்று தடவை ஓதி வருகின்றேன் ‏
(அல்குர்ஆன் : 112:1,2,3,4,)






சூரத்துல் இக்லாஸ் தமிழ் குர்ஆன் Tamil Quran (Tamil Translation of Surah Al-Ikhlas)

No comments: