ராஜா வாவுபிள்ளை
காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் மட்டுமே உயிர் வாழுகின்ற ஒரு அரிய உயிரினம்.
உலகின் வேறுஎந்த பகுதியிலும் காணக் கிடைக்காத ஒரு மிருகமாகும்.
வரிக்குதிரையும் ஒட்டகச்சிவிங்கியும் கூடியதில் உருவான ஒரு கலப்பினம். காங்கோ நாட்டு மக்கள் இதை 'ஒக்காப்பி' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இது பார்ப்பதற்கு வரிக்குதிரையின் சாயலில் இருந்தாலும் ஒட்டகச்சிவிங்கியின் குடும்பத்தைச் சார்ந்தது.
மிகவும் சாதுவானது. இருப்பினும் வளர்ந்த ஒக்காப்பி தனக்கென அமைத்துக் கொண்ட நிலப் பரப்பில் வேறு மிருகங்களை அனுமதிப்பதில்லை. வேற்று மிருகங்களின் இடத்திலும் ஆக்கிரமிப்பு செய்வதில்லை.
நான் சில வருடங்களுக்கு முன்னர் உகாண்டாவிலிருந்து தரைவழியாக காங்கோ நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான கிசங்காணி நகருக்கு சென்றபோது இடையிடையே அடர்ந்த காடுகளையும் கடந்து சென்றோம். அப்போது ஓரிடத்தில் இளைப்பாற இறங்கியபோது ஒக்காப்பியை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.
இன்று பழைய ஆல்பத்தை புரட்டும்போது ஒக்காப்பியும் கண்ணில் பட்டது.
அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
No comments:
Post a Comment