- அபு ஹாஷிமா
விசா வாங்காமல்
டிக்கட் எடுக்காமல்
அண்டை நாடு
அயலான் நாடு என்ற
பாகுபாடில்லாமல்
எல்லாவற்றுக்கும் பறந்து செல்ல ஆசை ...!
ஆனால் ...
நான் பறவை இல்லையே !
ஆதம் நபியின்
பாதம் பதிந்த
இலங்கை காலி மலையை
அடிமைகள் ரத்தம் சிந்திய
ரோமப் பேரரசை
சாக்ரடீஸ் மரணித்த
ஏதென்ஸை
கிளியோபாத்ராவின் பேரெழிலை
ஃபிர்அவ்னின் தர்பாரை
பாபிலோனிய பூந்தோட்டத்தை
சீனாவின் நீள் சுவரை
சாட்டையடிகளால்
ரத்தம் வழிய வழிய அதனைக் கட்டிய
தொழிலாளியை
இமயத்தின் உயரத்தை
காபூலின் திராட்சைகளை
இமாம் அலியாரின்
ஞானத் தலைநகராம்
பாக்தாதை
அய்யூப்கானின் லாகூரை
அவர்களின் காலத்திலேயே
சென்று பார்க்க ஆசை ... !
ஆனால்
என்னிடம்
காலச் சக்கரம் இல்லையே !
கற்பனை வாகனத்தை
வைத்துக் கொண்டு
காண நினைப்பவைகளை
கண்டு ரசிக்க
நான் கவிஞனும் இல்லையே
என்ன செய்வேன் ...?
* எழுதியதில் பிடித்தது !
No comments:
Post a Comment