Wednesday, March 28, 2018

ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)

ஸலாஹுத்தீன் ஐயூபி!

யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்?

எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்? வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும் பதிவுகளும் மக்களின் விழிகளும் தேடலும் கேள்வியுமாக அலைபாய்கின்றனவே - எதற்கு?


ஜெருசலத்தை மீட்டார், வென்றார், சிலுவை யுத்தக்காரர்களை விரட்டினார் என்கிறார்களே - எப்படி?

எங்கோ இருந்த ஐரோப்பியர்களுக்கு ஏன் ஜெருசலம் நோக்கி படையெடுப்பு? கலீஃபா எங்கிருந்தார்? ஸெல்ஜுக் துருக்கியர்கள், நூருத்தீன் ஸங்கி, இவர்களுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் என்ன தொடர்பு?

ஆ சிரியா! என்று இன்று பரபரத்துக் கிடக்கிறதே நிலப்பரப்பு; சிலுவை யுத்தங்களின்போது அந்த டமாஸ்கஸ், அலப்போ களங்களின் நிலை என்ன? அவையும் தெற்கே தொலைவில் இருந்த எகிப்தும் அன்று அந்த அரசியலுக்கு மையப்புள்ளியாய் அமைந்தது ஏன்?

தங்களைத் தோற்கடித்தவர், வீழ்த்தியவர் என்றாலும் தங்கள் எதிரி சுல்தான் ஸலாஹுத்தீனை இன்றும் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் - எப்படி நிகழ்ந்தது அந்த மாயம்?

வெகு முக்கியமாக இன்றைய முஸ்லிம்களின் அரசியல் சூழலுக்கும் அன்றைய அரசியல் சூழலுக்கும் வித்தியாசம் என்ன? அட! வித்தியாசம் என்றொன்று இருந்ததா என்ன?

விடையளிக்க வருகிறார் - சுல்தான் ஸலாஹுத்தீன்!

குருதி பெருக்கெடுத்து ஓடும் பரபரப்புத் தொடர்!

விரைவில் இன்ஷா அல்லாஹ்.

ஆசிரியர் - நூருத்தீன்


  >'

 நன்றி சத்தியமார்க்கம்.காம்

No comments: