மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்
மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா அன்வாரீஅவர்கள்
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari M.A.M.Phil பிறப்பு 13/11/1976
ஊர் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம்
படிப்பு ஐந்தாம் வகுப்பு ஆனால் M.A.M.Phil ஆலிம் ஸனது பெற்ற வருடம் 1996
திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் 21ஆண்டு காலம் காலமாக மார்க்க பணியாற்றினார்
நமது நீடூர் ஜாமிஆவில்12ஆண்டு காலமாக தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வருகிறார்
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari அன்வாரீ
அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
உலக கல்வியோடு மார்க்க கல்வியும் கற்றவர்
சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்
ஆங்கிலம் ,அரபு ,உருது, மற்றும் தாய்மொழி தமிழும் இவர் புலமை பெற்றவைகள்
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா அன்வாரீஅவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,சொற்பொழிவாளர் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி ஆசிரிய சேவை செய்து வருபவர் .
மௌலவி அல்ஹாபிழ் புகாரி மௌலானா Buhari Anwari அவர்களை
வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
No comments:
Post a Comment