Thursday, March 1, 2018

நாம் யாருக்காக வாழ்கின்றோம்??

#சிரியா
அம்மா

நீங்கள் சங்கமித்த நேரத்தில்
உருத் தெரியாதப் பிண்டமாய்
தொடங்கிய நொடியில் இருந்து
உன் அடி வயிறு நிரம்பத் தயாராகிறது
நீ விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
உணர்வுகளை உள்ளடக்கி
என்னை உச்சி மோர்ந்துப் பார்க்க
உன் உயிரினைத் திரட்டி
நான் வரும் நாட்களுக்காக
காத்துக்கொண்டு இருக்கின்றாய்
காலம் கனிந்து நான் பிறந்தபோது
நீ கொடுத்த தாய்ப்பாலில்
நம்பிக்கை என்ற சுவையை
மட்டுமே நானறிந்தேன்
ஆனால்

இங்கு யாரோ செய்த தவறுகளுக்கு
எங்களை ஏன் தண்டிக்கின்றார்கள்
எங்களுக்கு விளை நிலமும் வேண்டாம்
விளையாட்டும் வேண்டாம்
யாருமற்ற சூழலில்
நான் யாரை எப்படிக் கூப்பிடுவது
அம்மா என்றா
அப்பா என்றா
அத்தை என்றா
மாமா என்றா
தயவு செய்து இனிமேலாவது
எங்களை விட்டு விடுங்கள்
எப்படி ஒரு துளி உயிரில் உருவம் வருகிறதோ அது போல
எங்கள் சுவாசம் அடங்கும் முன்
என் ஒரு துளி ரத்தத்தில்
யாராவது ஒருவர் உயிர்ப்பிழைக்கட்டும்
அதுவரை என் தாயின் முலைப்பாலில்
கிடைத்த நம்பிக்கையுடன்
சிறிது நேரம் சுவாசித்துக்
கொள்கிறேன். !!!   :)

#சுபஸ்ரீஸ்ரீராம்
துபாய்
From: Subhasri Sriram <pgssubhaaiyar@gmail.com>
rom: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: