Raheema Beevi
நாங்கள் ஆறு பேரும் பெண்களாக பிறந்தும் ஒரு நாள் கூட ஆண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டதில்லை.எங்களை ஒருபோதும் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஒரு அடிகூட அடித்த ஞாபகம் இல்லை.ஒரு ஆண்குழ்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெண்ணாக பிறக்கும் போது உம்மா ஆதங்கத்தில் அழுவாங்களாம். அல்லாஹ் கைகால் சுகத்துடன் குறையில்லாமல் அழகான குழந்தைகளை தந்திருக்கிறானே என்று அப்போது கூட உம்மாவை ஆறுதல் படுத்துவது வாப்பாதான்.
வாப்பாவிற்கு தன்னம்பிக்கையை விட இறை நம்பிக்கை அதிகம்.அந்த நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கவில்லை.,வெகு விரைவிலேயே எங்கள் அணைவருக்கும் திருமணமாகி இறையருளால் நல்ல படியாக செட்டிலாகி விட்டோம்.எல்லோருமே பக்கத்தில பக்கத்தில தான் இருக்கிறோம். அதுவே வாப்பாவிற்கு ரெம்ப சந்தோசம். என் பிள்ளைகள் அனைவரையும் நினைத்தவுடன் பார்க்கிற மாதிரி அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று அடிக்கடி சொல்வாங்க. உம்மா இப்போ எங்களுடன் இல்லை அந்த குறை தெரியாமல் வாரம் ஒரு முறையாவது வாப்பா வீட்டுக்கு அழைத்து விடுவாங்க. நாங்கள் எல்லோரும் சேர்ந்திருந்தால் வாப்பாவிற்கு அதுபோல் சந்தோசம் வேறில்லை. வாப்பா எங்களுக்கு பெரிய அளவில் சொத்து சுகம் தராவிட்டாலும் விலைமதிக்க முடியாத வாப்பாவின் துஆ எங்களுக்கு எப்போதும் உண்டு. வாப்பாவின் துஆவினால் தான் இந்த அளவுக்கு இருக்கிறோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு. நாங்களும் வாப்பா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறோம் அல்லாஹ் எங்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் வாப்பாவிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தை யும் கொடுக்கனும் என்பதுதான் எங்கள் துஆ.
Raheema Beevi
No comments:
Post a Comment