வேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுகளை பகிர்கிறேன்
சிலருக்கு இதனை கண்டு அயர்ச்சியாக இருக்கலாம். அன்பர்கள் சிலர் பல ஆண்டுகளாக ஓர் நிறுவனத்தில் இருக்கலாம் அவர்கள் கம்போர்ட் ஜோன் எனப்படும் மனநிலையில் இருப்பவர்கள் சிலர் வேலை தேடும் நேரத்திற்கான நிர்பந்தம் எப்பொழுதும் ஏற்படலாம் . ஆண்டுகள் பல கடந்தும் அங்கீகாரம் இல்லாமல் மாற்றம் விரும்புபவர்கள் சிலர் பொருளாதார தேவைகளுக்காக சிலர் முயற்சிப்பர்.
இன்றைய சூழலில் எந்த நிறுவனமும் உங்களை கொண்டாட தயாரில்லை நான் 8 வருடம் உழைத்த நிறுவனத்தில் எனது ராஜினாமாவை அறிவித்ததும் நடத்தப்பட்ட விதம் மிகவும் வேதனையானது. உங்களது உழைப்பு மற்றும் சாதனைகள் அந்த நேரத்தில் அவர்களின் கண்ணுக்கு தெரியாது சிலர் இதனை தனிபட்ட ஓர் விடயமாக கருதுகின்றனர். அன்றைய காலகட்டத்திற்கு உங்களை நீங்கள் தயார் செய்திடவில்லை எனில் போட்டியான உலகில் நீங்கள் நிற்பது கடினம். 8 வருடம் நான் கற்றுக்கொண்ட வித்தைகளை விட அதிகமான விசயங்களை கடந்த இரண்டு வருட அனுபவத்தில் கற்றேன்
நாளுக்கு நாள் புதிய முன்னெடுப்புகள் கடினமான சூழல்கள் வாரத்தில் 5 நாட்கள் என்றாலும் சூழல் வித்தியாசமானது தினமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துகொண்டே இருக்கும் ஆக முன்னரை விட அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயார் செய்யப்படுகிரீர். சொல்லவும் சங்கடம் ஹாஸ்யமாக இருக்கலாம் ஓர்முறை நான் மாற்றம் விரும்பிய நேரம் மனிதவளம் சார்ந்த சில முன்னேற்ற கானோலிகள் தினமும் பார்த்தேன் மனதளவில் ஓர் பயம் இருந்தது சில மாதங்கள் எடுத்த தவறான முடிவால் கடினமான பாதையை கடந்திட நேரிட்டது ஆனால் மனம் தளரவில்லை நண்பர்கள் கேட்கும்போது ஓர் நேர்மறையான பதிலை சொல்வேன் நம்ப கடினமாக இருக்கலாம் பல மாதங்கள் ஊதியமின்றி வாழ்ந்தேன் நண்பர்கள் குடும்பத்தினர்கள் ஊக்கம் அளித்தனர். அந்த நிலையில் பங்கெடுத்தவர்கள் சிலர் மிகவும் கடினமான காலகட்டம் அது ஆனால் தன்னம்பிக்கையில் குறைவில்லை. ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவம் நேர்முகங்கள் தொடர்ந்தன நிராகரிப்புகள் இல்லை மறுநேர்முகங்களும் தொடர்ந்தன இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு சிறிதல்ல மிகவும் பெரிய பொருளிழப்பு ஆனால் சோர்வடையவில்லை உங்களின் 50 வயதிலும் இழந்த பொருளை மீட்டிடலாம் ஆனால் நம்பிக்கையை இழந்தால் நீங்கள் நடைபிணம். இறைவனின் அருள் என்றுமே மிகைத்திருக்கும் நம்பிக்கையோடு தொடருங்கள் . உங்களின் தன்னம்பிக்கை மட்டுமே அடுத்தகட்டத்திற்கு நீங்கள் பயணிக்க உதவும் . உங்கள் திறனை நம்புங்கள். இன்று உள்ள பணியில் சேர்ந்திட 5 நேர்முகங்கள் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் பிடித்தது ஆனாலும் ஒவ்வொரு நேர்முகமும் நம்பிக்கையை அதிகரித்தது. காலம் பலவற்றை கற்றுக்கொடுக்கும் உங்களின் முதல் வேலைமாற்றம் மட்டுமே ஓர் பதட்டத்தை தரும். நல்ல பணியில் இருக்கும் போது வாய்ப்புகள் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் புதிய வாய்ப்புகள் உங்களை மேம்படுத்தும் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்யும். நான் எனது சொந்த அனுபவங்களை இங்கே சுட்டிகாட்டுவது உங்களின் நம்பிக்கையை உயர்த்திடவே உங்களை நம்புங்கள் நிச்சயமாக நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் நம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறன்சார்ந்து வித்தகர்கள், அந்த இலக்கை நோக்கி பயணித்திட உங்களிடம் தன்னம்பிக்கை மிகைத்திருக்க வேண்டும் போட்டியான உலகம் காலத்திற்கு ஏற்றவாறு தகவமையுங்கள் மற்றவருக்கு உதவிடும் சூழல் கிடைத்தால் உங்களால் இயன்ற உதவியினை செய்திடுங்கள் நிச்சயமாக நீங்கள் செய்திடும் ஒவ்வொரு உதவிக்கும் இறைவனின் ஆசிர்வாதம் அதிகரிக்கும். இறைவனின் ஆசிர்வாதங்கள் காலத்தால் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அன்பளிப்பாக திரும்பும் . உங்களின் நற்கிரியைகள் என்றென்றும் வீண் போகாது அவை மனதை எளிதாக்கும் அழுத்தத்தை குறைத்திடும். பல சூழல்களில் நண்பர்களால் உறவினர்களால் ஏமாற்றப்பட்ட சூழல்கள் அதிகம் ஆனால் சிலவற்றை தவிர்க்கிறேன் அன்றி என்னை முழுமையாக ஓர் சுயநலமான மனிதனாக மாற்றிட நான் விரும்பவில்லை அப்படியான ஓர் நிலைக்கு என்னை தள்ளாதே இறைவா என்றே நான் இறைஞ்சுகிறேன். உலகவாழ்க்கை அழகானது நாம் ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்து இருக்கிறோம் இறைவனின் படைப்பில் இந்த சார்பு அபரிதமானது அதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் உங்களின் தகுதிக்கு உட்பட்டு அதனை செம்மையாக செயல்படுத்துங்கள் நிச்சயமாக அந்த செயலில் அருள் மிகுந்திருக்கும்.
எதையோ சொல்ல நினைத்தேன் நீண்டுகொண்டே போகிறது உங்களின் முயற்சிகள் தொடரட்டும் நிச்சயமாக தன்னம்பிக்கை கொண்ட முயற்சிகளில் நீங்கள் வெல்வீர்கள்.
வாழ்க வளமுடன்
Sheik Mohamed Sulaiman
No comments:
Post a Comment