காரணமாகவோ..காரணமில்லாமலோ.... யாரையும் காயப்படுத்துவதோ கோபம் கொள்வதோ... கேலி கிண்டல் செய்வதோ...பிறர் மத்தியில் அவதூறு செய்வதோ....
அவரைவிட...தம்மையே அதிகம் பாதிக்கும்...அது அப்பொழுது மகிழ்ச்சியாகவோ,
பழிவாங்கி விட்டோம் என்ற திருப்தியையோ.. நிம்மதியையோ கொடுத்தது போல் இருக்கும்..
ஆனால் அது கொடிய விஷம் போல் நம்மில் நம் மனதில் பரவி... பேரிழப்புகளை ஏற்படுத்திவிடும்....
கோபம் கொள்வதும்.. பழிவாங்குவதும்.. போதை பொட்களுக்கு அடிமையாவது போல் தான்..
அந்த நேரம் மகிழ்ச்சியை..
ஆனந்தத்தை
கொடுத்தாலும்..அது
உடலுக்கு நன்மையில்லை...
கோபம் , பழிவாங்கும் எண்ணம், ஏளனம் குறைய குறைய..வேறு வேலைகளில் கவனப்படும் போது....உள்மனதில் சோர்வு ஏற்படும்...சில குற்ற உணர்வுகள்... உறுத்த ஆரம்பிக்கும்....
ஏன் துவள்கின்றோம்... எதற்காக இந்த ஆயாசம் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே... உற்சாகமின்றி... விரக்தி நிலைக்கு தள்ளப்படுவோம்....
காரணமேயிருந்தாலும்..
மன்னிக்கும் பக்குவமும்.. பொறுத்து விலகிபோகும் பெருந்தன்மையும் என்றுமே நம்மை உயர்த்தவும்..காக்கவும் வல்லது....
காரணமில்லாமல் ஒருவரை நோக வைத்து.. அவதூறு செய்திருப்போமானால்.. சில காலங்களிலேயே.. என்ன..ஏன் எதற்காக என்று ஒன்றும் புலப்படாமலேயே
அது குற்ற உண்ர்வா...வேறு என்ன மனநிலை என்று வரையறுத்து சரி செய்துகொள்ள முடியா
நிலை ஏற்பட்டு விடும்...
அப்பொழுது கூட இன்றும் சிலர் மந்திரமோ..சூனியமோ எதிராளியின் வேலை இது என்றே... தானே ஒரு காரணத்தை கற்பித்துகொண்டு...
உண்மை நிலை உணர்ந்து மனதை சரி செய்து கொள்ள முயற்சிக்காமல் மேலும் மேலும் மனதிற்கு கலவரத்தையே ஏற்படுத்தி...பாதிப்புகளிலிருந்து மீளமுடியாமல் அமிழ்ந்தே
போகின்றனர்...
முடிந்தளவு யாரையும் எதற்காகவும் நோக வைக்காமல் இருப்பது சிறப்பேயாயினும்... ஒருவேளை அப்படி நிகழ்ந்தே விடினும் மேலும் மேலும் வேறு காரணங்களை தானே தவறாக புரிந்துகொண்டு அதனை பெரிதாக்கி கொள்வது..
தனக்குதானே குழியை வெட்டி..தானே உள்ளிறங்கி மண்ணைப் போட்டு மூடிக்கொள்வதற்கு சமமாகிவிடும்...
எச்சரிக்கையாகவும் சமயோஜிதமாவும் அமைதியாகவும் இருப்போம்..
நன்றி தகவல் : செல்வி அருள்மொழி ....மன நல ஆலோசகர்..
தகவல் தந்த முகநூல நண்பர் Saif Saif அவர்களுக்கு நன்றி
No comments:
Post a Comment