Tuesday, June 27, 2017

எல்லா புகமும் இறைவனுக்கே.....

எல்லா புகமும் இறைவனுக்கே.....
பள்ளபட்டியைச் சேர்ந்த ரிபாத் சாருக் கலாம் சாட் என்ற கையடக்க செயற்கைக்கோளை தயாரித்தார் , சமீபத்தில் நாச விண்கலத்தில் ஏவப்பட்டது.
தந்தை இல்லாமல் , தன்னுடைய சொந்த முயற்ச்சியில் , எந்த ஒரு உதவியும் கிடைக்காமல்,குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உதவி கிடைக்கவும் இல்லை, இஸ்லாமிய சமுதாய மக்கள் வழிகாட்டவும் இல்லை அந்த சிறுவனுக்கு......ஆனால் இன்று என் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் என்று பெருமை மட்டுமே கொள்கிறார்கள் இஸ்லாமிய மக்கள்......!!!!
உண்மையிலேயே ரிபாத் சாருக் போன்ற பல இளம் விஞ்ஞானிகளை மதம் பார்க்காமல் தொடர்ச்சியாக வழிகாட்டுதல் கொடுத்து ,சாதனையாளராக்கியவர் யார் தெரியுமா ?
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வரும்
சகோதரி, ஸ்ரீமதி கேசன் .
(அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
மேலும், கலாம் சாட் செயற்கைக் கோளை தயாரிக்க , ஸ்ரீமதி அவர்களுடைய வழிகாட்டுதலுடன் , இளம் அறிவியல் விஞ்ஞானி ரிபாத் சாருக் தலைமையில்

Yagna Sai ,Lead technician
Mohamed Abdul Kashif
,Lead Engineer
Tanishq Dwivedi ,Flight engineer
Vinay bharadwaj ,Stuctural engineer
Gobinath ,Biologist,
Sivasooriya ,Botanist.
போன்றவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள்.

( தயவு செய்து இவர்களின் பெயரை மறைக்க வேண்டாம், மீடியா செய்யும் தவறை நாமும் செய்து மற்ற சாதனையாளர்களை ஏமாற்ற வேண்டாம்)
இதுபோன்று சொந்த திறமையில் யாருடைய உதவியும் கிடைக்காமல் ஒருவர் IAS ஆக வந்துவிட்டால், ஏன் ஊர் என்ற பெருமைபடுவதையும், என்னுடைய சமுதாயத் சேர்ந்தவர் என்று சொல்வதை விட ,உங்கள் ஊரைச் சேர்ந்த ஏதனும் துறையில் தனித் திறமை பெற்ற மாணவரை தேர்வு செய்து , அவர் விருப்பப்பட்ட துறையில் சாதனையாளர் ஆக வழிகாட்டுதலும், தேவையான உதவியும் செய்யுங்கள், அவர் சாதிக்கும் தருணத்தில் பெருமையாகக் சொல்லலாம்.
அப்போது அவரால் சமுதாயத்திற்க்காக உதவ முடியும் என்று நினைக்கலாம்.
Alhamedulillah, ரிபாத் சாருக் இப்போது வல்ல இறைவன் நிறைய உதவிக் கொண்டு இருக்கிறான், ரிபாத் உயரத்தை நோக்கி பறந்து கொண்டு இருக்கிறார்.
ஆனால், திறமை இருந்து பொருளாதார சூழ்நிலையால், உதவி கிடைக்காமல் இன்னும் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா ?
அவர்களும் ஒரு நாள் சாதிப்பார்கள் ,? அவர்கள் சாதிக்கும் போது பெருமை கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனக்கு தெரிந்த சாதனையாளர்களை பட்டியலிடுகிறேன்.
1) பெயர் : சையது ரயான்
படிப்பு : +2
சாதனை : இது வரை 17+ வகையான ஏர்கிராஃப்ட் (Aeroplane) தயாரித்து இருக்கிறான்.தந்தையும் மிகப்பெரிய படிக்காத அறிவியல் விஞ்ஞானி.
தாய்: கல்லுரி அருகே பொட்டிகடை.
தற்போது , அதே ஸ்ரீமதி அவர்களின் Space kids india அமைப்பின் வழிகாட்டுதலுடன் ஒரு விமான போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடு செல்ல இருக்கிறான்.ஆனால் அவனால் விமான தயாரிக்க தேவையான செலவைக் கூட எதிர் கொள்ள முடியவில்லை.
2) முகம்மது நதீம்
பாலிடெக்னிக் இறுதியாண்டு
கண்டுபிடிப்பு : 21 + அறிவியல் கண்டுபிடிப்பு
தந்தை : பிரியாணி கடை
3) முகம்மது இஸ்மாயில்
8+ அறிவியல் கண்டுபிடிப்பு
+2 மாணவர், தந்தை ரோட்டில் தண்ணீர் பழம் விற்கிறார்கள்.
4) 4+ மாணவர்கள் தேசிய அளவில் விளையாட்டில் தடம் பதித்து உள்ளனர்.
இது போன்று பல இளம் சாதனையாளர்கள் இருக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ், இது போன்ற பல துறைகளில் தனித் திறமை பெற்றவர்களை, சாதனையாளர்களாக உருவாக்க TN MEET - YOUNG ACHIEVER'S SEARCH & AWARDS 2017
விரைவில் TN MEET நடத்த உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது , உங்கள் ஊரில் உள்ள இளம் சாதனையாளர்கள் TN MEET ன் website ல் விண்ணப்பிக்க வைக்க வேண்டும்.
TN MEET YOUNG ACHIEVERS SEARCH & AWARDS 2017 போஸ்டரை உங்கள் ஊரில் உள்ள கல்வி நிறுவனங்கள் , பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்,சமூகத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் பயனுள்ள சாதனையாளரகளை உருவாக்குவோம்.
அனைத்து ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் , தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் , பைத்துல்மால்கள் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து TN MEET ன் இந்த திட்டத்துக்காக ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Jazkallah
முகம்மது ரபிக்
உதவிப் பேராசிரியர்
E-mail : rabik.scholar@gmail.com
Whatsapp : 9791475700

No comments: