இறையே இறையின் நிறைவே
=== அருளே அருளின் அருவியே
ஒளியே ஒளியின் ஒளிர்வே
=== கருவே கருவின் கர்த்தாவே!
ஆதியே ஆதியின் ஆரம்பமே
=== உண்மையே உண்மையின் ஊற்றே
தூய்மையே தூய்மையின் உறைவிடமே
=== பெருமையே பெருமையின் பிறப்பிடமே!
புனிதமே புனிதத்தின் புண்ணியமே
=== கருணையே கருணையின் கடலே
நேசமே நேசத்தின் வாசமே
=== அன்பே அன்பின் ஆசுவாசமே!
அறமே அறத்தின் ஆரம்பமே
=== தனிமையே தனிமையின் தனித்தன்மையே
ஒன்றே ஒருமையின் ஒருவனே
=== நிகழ்வே நிகழ்வின் நிதர்சனமே!
தொடக்கமே தொடக்கத்தின் தொடர்பே
=== நடப்பே நடப்பின் நாயகனே
முடிவே முடிவின் முழுமையே
=== வல்லோனே ஏகனே இறையோனே!!
No comments:
Post a Comment