அஞ்சுகம் அம்மையாரின்
கருக்குவளையில் உயிராகி
தமிழகத்தை ஆண்டிட
திருக்குவளையில் பிறந்தவனே ....
தடையற்ற உற்சாகமேந்தி
அகவைப் பயணமதில்
நூற்றாண்டு கண்டிட
நடையுற்று முன்னேறும்
ஆனா எழுதிட
பேனா பிடித்தால்
தேனா கொட்டிடும்
தமிழ்க் காதலனே ....
வங்கக் கடலாய்
அலையெழுந்து பொங்கி
சங்கத் தமிழில்
கொஞ்சிப் பேசும்
தங்கத் தமிழனே ....
சட்டமன்றத்தில்
உனது குரலாறு
பாய்ச்சிய வெள்ளத்தில்
நிகழ்த்திய வரலாறு
அறுபதை தொட்டது ....
குரலோடை சலசலக்க
அறிவார்ந்த பேச்சாலும்
நகைச்சுவை சொல்லாலும்
சட்டசபை கலகலக்க
வாதிடும் வித்தகனே ....
எதிர் கட்சிகளின்
அரசொலி அடங்க
கையெழுத்து பிரதியாய்
முரசொலி எழுதியவனே ...
இளமை பருவத்தில்
திமுகழக போராட்டங்களில்
உண்ணா நோன்பிருந்து
அண்ணா வாரியணைத்ததும்
அவரிதயம் அமர்ந்தவனே ....
விரல் பிடிக்கும்
கூரான பேனாவுக்கும்
குரல் வடிக்கும்
சாறான கரகரப்புக்கும்
மயங்கும் மக்களவர்கள்
போர்த்துகிற கதகதப்புக்கும்
உரிமை பெற்றவனே ....
வீழ்த்தும் எண்ணங்களோடு
சதித்து வாழ்வோர்களின்
அரசியல் களத்தில்
சாதித்து வாழ்பவனே ....
முதுமை வாழ்க்கையிலும்
முதுகை நிமிர்த்தி
புதுமை செய்திட
வாழத் துடிப்பவனே ....
பாதங்கள் பதித்தால்
நிமிர் நடை
வாதங்கள் புரிந்தால்
திமிர் பேச்சு
எதுகையிலும் மோனையிலும்
உயர் வீச்சு
தமிழை சுவாசிப்பதே
உயிர் மூச்சு
என்றியங்கி வாழ்பவனே ....
தமிழ்த் தேரினில்
பவனி வந்து
தொண்டர்களின் மனசிலமர்ந்து
அவனி பாராட்டும்
மக்கள் தலைவனே ....
இந்திய அரசியலில்
எவருக்கும் பணியாதவனே
எமர்ஜென்ஸி காலத்தில்
அச்சங்கள் அணியாதவனே
விவேகமான ஆளுமையின்
தாகங்கள் தணியாதவனே ....
உனை போற்றி
ஆதரிப்பனையும் தழுவி
தோளாடு அணைப்பாய்
உனை நோக்கி
எதிர்ப்பவன் வீசிடும்
நெருப்பையும் அணைப்பாய் ....
வாலிப காலத்தில்
உன்னுள் எழுந்த
போராட்ட குணம்
காற்றிடம் மோதியது
வயோதிக நாட்களில்
நீயில்லாத அரசியலில்
வெற்றிடம் நிலவுகிறது ....
சாதுரிய மூளையில்
யூகம் கோர்த்து
தேர்தல் களமிறங்க
வியூகம் அமைத்து
எதிரிகளை கலங்கடித்த
அரசியல் சாணக்கியனே ....
பத்து விரலுயர்த்தி
சத்து நாவிலிருந்து
முத்து உதிர்க்கும்
முத்துவேல் கருணாநிதியே ....
அரசியல் வானில்
மின்னுகிற நட்சத்திரமே
இறையருளின் பெருக்கத்தில்
தமிழமுதின் நெருக்கத்தில்
வாழணும் பல்லாண்டு ....
அப்துல் கபூர்
03.06.2017 ....
No comments:
Post a Comment