அப்துல் கையூம்
வருண்காந்தி விஷயம் ஒரேநாளில் உலகம் முழுதும் பரவி விட்டது போலும். இன்று ஒரு அரபி நண்பர் கேட்டார் "இந்த வருண்காந்தி யார்? காந்திஜியின் கொள்ளுப் பேரன்தானே?" என்று. பொதுவாகவே காந்திஜியின் மீது அரபிகளிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. பாவம் காந்தி பெயர் இப்படி நாறுகிறதே என்று நினைத்தேன்.காந்தி குடும்பத்துக்கும் நேரு குடும்பத்திற்கும் ஒரு எழவு சம்பந்தமும் இல்லை என்று புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது.
ரவீந்தரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் எப்படி எந்த சம்பந்தமும் இல்லையோ அப்படித்தான் இதுவும்.
இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் பெரோஸ் காந்திதானே..?
பெரோஸ் ஜஹாங்கிர் கேந்தி (Feroze Jahangir Ghandy) பார்ஸி சமூகத்தைச் சார்ந்தவர். அவருடைய மதம் Zoroastrianism. ஃபெரோஸ் கான் உடைய தந்தை பெயர் ஃபரீதுன் ஜஹாங்கிர் காந்தி .
ஃபெரோஸ் காந்தியின் முழுப்பெயர் ஃபெரோஸ் கான் என்றும், அவர் தந்தையின் பெயர் நவாப் கான் என்றும், பெரோஸ் உண்மையில் ஒரு முஸ்லீம் என்றும், அவரது தாயார் பார்ஸி சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் சிலர் வாதம் புரிகிறார்கள். அப்படியிருக்க வாய்ப்பில்லை. பார்ஸி சமூகத்தவர் ஈரானிலிருந்து வந்தமையால் பெயர் முஸ்லீம் பெயர்களை ஒத்து இருக்கும்.
ஃபெரோஸ் காந்தியின் உடல் எரியூட்டப்பட்டு அலகாபாத்திலுள்ள பார்ஸி கல்லறையில் அவருடைய சாம்பல் தகனம் செய்யப்பட்டது.
Ghandy என்ற தனது பெயரை அரசியல் லாபம் தேடி காந்தி என்று லண்டனில் பதிவு செய்துக் கொண்டார் ஃபெரோஸ்.
நேருவின் மகளார் இந்திரா பிரியதர்ஷினி . ஃபெரோஸை திருமணம் செய்த பிறகு இந்திரா காந்தி ஆகிவிட்டார்.
அவருக்கு பிறந்த இரண்டு மகன்கள் ராஜீவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆகிவிட்டனர்.
இந்திராகாந்தியின் இரண்டு மருமகள்கள் சோனியா காந்தி, மேனகா காந்தி ஆகி விட்டனர்.
இந்திராவின் பேரன்கள் ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகி விட்டனர்.
என் அரபி நண்பருக்கு எற்பட்ட குழப்பத்திற்கு மூல காரணம் நம்ம ஃபெரோஸ் காந்திதான். அவர் மட்டும் தன் ஒரிஜினல் பெயரை மாற்றாமல் இருந்திருந்தால், இப்போது வருண்காந்தி செய்திருக்கும் நாற்றச் செயலுக்கு, காந்திஜியின் பெயர் ரிப்பேர் ஆகி இருக்காது.
நான் சொல்வது சரிதானே ஐயா..!
(பி.கு: ஃபெரோஸ் - பார்ஸி மதம், நேருஜி - காஷ்மீரி பிறாமணர் பண்டிட் , சோனியா - கிறித்துவர், பிரியங்கா காந்தி - இந்து மதம், ராபர்ட் வத்ரா - கிறித்துவர், மேனகா காந்தி - சீக்கியர்) வருண் காந்தி.... உஷ்... தெரியாது..
No comments:
Post a Comment