திகில் சம்பவம் ...
இனியவர்களேஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
இறையருளால் நாங்கள் வாழ்ந்திடும் உகாண்டாவில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் எனக்கு கம்பாலாவில் நிகழ்ந்த மறக்க இயலாத உண்மை சம்பவத்தை எனது நினைவுகள் அசை போட உங்களோடு பகிர்கிறேன் ...
30.09.2011 அன்று உகாசேவாவின் முதல் உணவுத் திருவிழா நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராகிய நான் முதல் கலந்துரையாடல் கூட்டத்தை இனிதாய் முடித்து ....
நானும் எனது ஆருயிர் நண்பர்கள் Mohamed Kassim - Mohamed Gaffoor மற்றும் ஏனைய உறுப்பினர்களும் அவரவர் இல்லங்களுக்கு விரைந்திட வளாகத்தின் கீழ்த் தளத்திற்கு வருகிறோம் அப்போது முன்னிரவை கடந்து பின்னிரவை நோக்கி நேரம் நடந்து செல்கிறது ...
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கு உகாண்டாவில் இரு சக்கர வாகனங்கள் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும் அவைகளை Boda Boda என்று அழைப்பார்கள் ...
வெளியே நிற்கும் எங்களை கண்டதும் போடா போடா ஓட்டுனர் ஒருவன் போகலாமா என்று கேட்டதும் வேண்டாம் போடா என்று சொல்ல மனமில்லாத நான் வாடா என்று அழைத்து அவன் கேட்ட ஒரு டாலர் வாடகைக்கு நண்பர்களிடம் விடை பெற்று வாகனத்தின் பின்னால் அமருகிறேன் ...
மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள நான் பணியாற்றும் தொழிலக இல்லத்திற்கு வாகனம் ஆக்சிலேட்டரை கூட்டியும் குறைத்தும் தார் சாலையில் செல்கிறது ....
இம்மாதிரி பயணிக்கையில் ஓட்டுனர்களிடம் நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய் தினமும் உனக்கு வருமானம் என்ன என்ற விவரங்களை கேட்டுப் பெறுவது எனது வழக்கம் ...
அம்மாதிரி நான் கேட்கையில் அவனது பதில் சரியில்லை என்பதை தெரிந்து கொஞ்சம் அமைதியானேன் ....
போக்குவரத்து அடையாளம் காட்டும் விளக்குகளை தாண்டி வருகையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையிலும் தூரங்களுக்கு செல்லும் உகாண்டா பிரஜைகள் தங்களுக்கான வாகனங்களை தேடப்பட்ட நிலையிலும் பஸ் நிறுத்தங்களில் ஆங்காங்கே நிற்கிறார்கள் ....
Esso Corner என்கிற சாலையில் வேகமாய் பயணித்த இரு சக்கர வாகனம் திருட்டு நிறைந்த இருட்டுப் பகுதியான ரயில்வே சாலையில் திரும்பி நுழைகிறது ...
இது நான் செல்லும் பாதை அல்ல என்று ஓட்டுனரிடம் சொன்னதும் வண்டியில் பெட்ரோல் இல்லை என்று மெதுவாய் நிறுத்தினான் ...
இரவு போர்த்திய இருள் போர்வை வான் முகிலை மறைக்க நிகழப் போகும் திகிலை என் மனம் அப்போது உணரவில்லை ....
எனது வீட்டை அடையாத நிலையில் என்னோடு பேசிய வாடகையை விடவும் கருப்பன் இரு மடங்காக 2 டாலர் கேட்கிறான் ....
நானும் சரி என்று பாக்கெட்டிலிருந்த ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்ததும் இன்னொரு போடா போடா கருப்பன் அங்கு வந்து ஏற்கனவே உள்ளவனோடு இணைகிறான்
எதிர்பாரா நிகழ்வு எதிர்பாராமல் நிகழத் துவங்குகிறது ...
முதலாமவன் எனது கைகளை தோள் பட்டையோடு நெருக்கி பிடித்தவாறு எனது சட்டைப் பையை கிழித்து அதிலிருந்த 60,000 ஸில்லிங்ஸை (அப்போதைய மதிப்பு 24 டாலர்) எடுக்கிறான் ...
நான் எடுத்துக் கொள் என்றதும் இரண்டாவமன் அவனது கையிலிருந்த கத்தியை நீட்டி எனது வயிற்றுப் பகுதியின் பக்கத்தில் வைத்து உன்னை கொன்று விடுவோம் கூடுதல் பணம் தா என்று மிரட்டுகிறான் ....
ஆள் நடமாட்டம் குறைவான நேரமாகிய இரவு 10.50 மணி ...
நீட்டும் கத்திக்கும் எனது வயிற்றுக்கும் இடையுள்ள தூரம் மைக்ரோ மில்லி மீட்டர் அளவு என்பதை நான் உணருகிறேன் ....
கத்தியை பிடித்திருக்கும் கருப்பனின் கைகள் அசைந்தாலோ அல்லது எனது உடம்பு அசைந்தாலோ கத்தி எனது வயிற்றை பதம் பார்க்கும் என்பது கிட்டத் தட்ட உறுதி ....
யா அல்லாஹ் ...
தொடரும்
இன்ஷா அல்லாஹ் ...
அன்புடன்
அப்துல் கபூர்
No comments:
Post a Comment