Sunday, October 2, 2016

உகாண்டாவில் நிலக்கடலையும் இரட்டைப்பிள்ளையும் ....!




ராஜா வாவுபிள்ளை
உகாண்டாவில் பலவகையான எண்ணெய்வித்துக்கள் விளைகிறது. அவற்றில் நிலக்கடலையும் ஒன்றாகும்.
எண்ணெய்வித்துக்கள் மற்றும் அதன் எண்ணெய் சார்ந்த தொழிலிலும் பலவருடங்களாக ஈடுபட்டுவருவதால் இந்த
பதிவை போடவேண்டுமென தோன்றியது.
ஆனால் நிலக்கடலையில் இருந்து சமையல் எண்ணெய் எடுப்பதில்லை மாறாக உணவிற்கான கூட்டாக கடலை சட்டினிக்கும் குழம்புக்கும் இடையிலான ஒருவகை சாஸ் சமைத்து உண்ணுகிறார்கள். அதில் மஷ்ரூம், புகைபோட்ட கருவாடு, கீரைவகைகளையும் போட்டும் சமைப்பார்கள். எரிப்போ மசாலாவோ எதுவும் சேர்ப்பதில்லை. உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு. எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது நிலக்கடலை குழம்பை மதியஉணவில் உண்பதை வழக்கமாகிக் கொண்டுள்ளேன்.

உணவின் முக்கிய கூட்டாக நிலக்கடலை குழம்பு இருப்பதால் பச்சை நிலக்கடைக்கு அன்றாட தேவை தொடர்ந்து இறங்காமல் இருப்பதாலும் நல்லவிலையும் கிடைப்பதாலும் அதை ஆட்டி எண்ணெய் எடுக்க ஆகும் உற்பத்தி செலவு எண்ணையின் விற்பனை விலைக்கு கட்டுப்படியும் ஆகாது.
மேலும் தேநீர் அருந்தும்போது முக்கிய பலகார பண்டமாக வறுத்த மற்றும் பொரித்த நிலக்கடலையை சேர்த்து உண்ணுவதை உகாண்டா மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
உகாண்டாவின் பாரம்பரிய உணவுகள் பொதுவாகவே நீராவியில் அவித்து சமைத்ததாகவும் மசாலா எதுவும் சேர்க்காததாகவுமே உண்ணப்படுகிறது. தற்போது பல பன்னாட்டு விரைவு உண்டி கலாச்சாரம் தலைநகரம் கம்பாலாவில் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. பிட்சா ஹாட்டும் KFCயும் ஏற்கனவே வந்துவிட்டது.
கடலைக்குழம்பு ஆண்களுக்கான தாதுபுஷ்டியை அதிகரிப்பதாக உள்ளுளர்வாசிகள் நம்புகிறார்கள்.
உலகில் இரட்டைக்குழந்தைகள் அதிகமாக பிறக்கும் நாடுகளில் ஒன்றாக உகாண்டா திகழ்வதையும் நினைவுகூறுகிறேன்.
நான்காணும் உகாண்டா ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: