Monday, October 10, 2016

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

டாக்டர் அன்சாரி
நமதூர் பக்கம் வாசுதேவ நல்லூர்காரர்
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவர்
நாகர்கோவில் பிரபல வழக்கறிஞர் பகருதீன் ஆதமின் மருமகன்.
எனது நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர்.

டாக்டர் அன்சாரி...
அமெரிக்காவில் - சவ்த் கரோலினா மாநிலத்தில் பிரபல கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்.
அங்கு அவரை அறியாதவர் எவருமில்லை.
அவரது மகன் அஜீஸ் அன்சாரி ( யார் இந்த அஜீஸ் அன்சாரி? )
பிரபல ஹாலிவுட் நடிகர்.
சமீபத்தில் வெளியான "மாஸ்டர் ஆப் நன்"
படத்தில் மகனுடன் இணைந்து தந்தை பாத்தி ரத்தில் நடித்த டாக்டர் அன்சாரி அமெரிக்காவில் இப்போது மிகவும் பேமசாகி விட்டார்.
நகைச்சுவை ததும்பும் அவரது உரையாடல் அவருக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.
நடிப்பில் மகனையும் மிஞ்சி விட்டார் டாக்டர்
அன்சாரி.
65 வயதை தாண்டிய டாக்டர் அன்சாரியை அமெரிக்க திரையுலகம் இருகரம் நீட்டி வர வேற்க தயாராகி விட்டது.
டாக்டர்களாக நடிப்பதை விட நடிகராக மாறும் நண்பர் டாக்டர் அன்சாரியை நான் பாராட்டுகிறேன்.
Now a days.....
It's better to be an actor than a doctor.
Dr. Vavar F Habibullah 

No comments: