Friday, October 14, 2016

பெயர் தெரியா பெரியவர்

நேசித்தவரை இழந்துவிட்டோமோ என்று எண்ணக்கூடியவரை உங்கள் கண்ணெதிரிலே நடமாடிக்கொண்டிருப்பதை அமைதியாக கண்டுக்கொண்டிருப்பதுதான் சோதனையின் அவலம்!
-பெயர் தெரியா பெரியவர்

ஒரு தடவை தானே என்றுதான்
ஒவ்வொரு தவறும் துவக்கப்படுகின்றது!
-பெயர் தெரியா பெரியவர்

பொய்கள் சொல்லி சொல்லி உங்கள் முகம் முழுவதும் விஷமேறி நீலம் பூத்திருக்கிறது!
-பெயர் தெரியா பெரியவர்



ஒரளவிற்கு மேல உங்களால் நடிக்க முடியாதென்பதை கையும் களவுமாய் பிடிப்பட்ட பின்னேதான் உணர்கிறீர்கள் என்பதுதான் சோகம்!
-பெயர் தெரியா பெரியவர்

ஏமாற்றிக்கொண்டே வாழ்ந்துவிடலாம் என்பவர்கள், ஒன்றை மறந்தே போயினர்; இன்னும் அவர்கள் வாழவே இல்லை என்பதை!
-பெயர் தெரியா பெரியவர்

உதாசீனப்படுத்தப்படும் உங்களின் நியாயமான அத்துனை வேண்டுகோளும் நீங்கள் அவர்களுக்கு நேசத்துக்குரியவரில்லை என்பதை சொல்லாமல் சொல்லும்!
-பெயர் தெரியா பெரியவர்

நம்மால் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாதென்று தெரிந்த ஒன்றை; அமைதியாக ஏற்றுக்கொண்டு அதன் போக்கிலே விட்டுவிடுவது ஒருவகை தெளிவு!
-பெயர் தெரியா பெரியவர்

ஆத்மார்த்தமான நேசத்தில் Possessivenessஐ சுயநலம் அல்லது பொறாமையென்று ஒற்றை வரியில் விரிவுரை அளித்திடமுடியாது; நேசிப்பவர்களுக்கு மட்டுமே விளங்கிக்கொள்ளக்கூடிய இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டு, இன்னும் எழுதி முடிக்கப்படாதா புஸ்தகம் அவை!
-பெயர் தெரியா பெரியவர்

தவறுகளை சரி செய்ய பின்னோக்கி செல்வதென்றால் உங்களுடன் வாழும் அத்துனை மனிதர்களும் சேர்ந்தேதான் வருவார்கள்; ஒவ்வொருவரும் அவர்களின் தவறுகளை சரி செய்ய!
-பெயர் தெரியா பெரியவர்


Yasar Arafat

No comments: