Wednesday, October 12, 2016

கிழவன்

Yasar Arafat
பணம் தேடும் பந்தயத்தில் பழைய/நொண்டி குதிரைகள் அவமானப்படுத்தப்படுகின்றன; வெற்றிப்பெறும் குதிரைகள் சிலாகிக்கப்படுகின்றன; வெற்றி தோல்விக்கு இடையில் குதிரைகளைப் பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை!
-கிழவன்

தவறவிட்ட வாழ்க்கையென்று;
நன்றாக வாழும்போது தோன்றுவதில்லை!
-கிழவன்

விருப்பமானவர்களிடம் எப்போதும் நீங்கள் இரண்டாம் பட்சமாய்தான் நிற்கவைக்கப்படுகிறீர்கள் என்ற வலியோடு காத்திருக்கும் தருணம் அவ்வளவு இலகுவானதல்ல!
-கிழவன்


பிஞ்சுகளை இன்னொருவருடன் ஒப்பீடு செய்கிறீர்கள்; நல்லவேளை இன்னும் அவர்கள் இன்னொரு பெற்றோருடன் உங்களை ஒப்பீடு செய்ய துவங்கவில்லை!
-கிழவன்


குழந்தைகள் வளர வளர தேய்ந்துப்போகிறது அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு;
முழுமையாக வளர்ந்து முதுமையைத் தொட்டபின்னே ஏங்கி நிற்கிறார்கள் அதே அன்புக்கு!
-கிழவன்

மரணம் சம்பவித்த வீட்டாருக்குதான் இழப்புகளெல்லாம்; வெளியாட்களுக்கு இறந்தவர் இரண்டு கீராத் மலையளவு நன்மையை பெற்றுத் தரப்போகும் ஜனாஸா!
மனிதன் அவ்வளவுதான்; அப்படித்தான்...!
-கிழவன்

ஒண்ணுமில்லை யென்று சொல்லி துடைக்கப்படும் விழி நீரில்தான் ஆயிரம் கதைகள் ஒளிந்துள்ளது!
-கிழவன்

Yasar Arafat

No comments: