Saturday, October 8, 2016

கவிதை அல்ல ...

கவிதை அல்ல ...
நெற்றியில் உரசும்
தாயின் முத்தம்
நிம்மதிக் குவியலை
நிலைக்கச் செய்கிறது ...
மனசார பொழிந்திடும் 
தந்தையின் பாசம்
வாழ்க்கையின் பாதைகளை
செப்பனிட்டு சீரமைக்குது ....
இதயத்தால் சிந்திடும் 

மனைவியின் அன்பு 

உள்ளத்து நிலங்களில்
மகிழ்வெனும் விதைகளிடுது ....
குடும்பத்தை சுமக்கும்
தலைவனின் உழைப்பு
வாழ்க்கையின் தேக்கங்களை
நகர்த்தி தெளிவாக்குது ....
இலைகள் உதிர்க்கும்
தென்றலின் சுகமது 
உடலின் திசுக்களை
வருடிச் செல்லுது ....
பற்கள் விரிக்கும்
மழலையின் சிரிப்பு 
கவலைகளின் சேமிப்பை
திருடிச் செல்லுது ....
இதழ்கள் விரிந்த
மலர்களின் வாசம்
மூக்கின் துவாரங்களில்
ஊடுருவி மணக்குது ....
மலர்களை நனைத்திடும் 
பனியின் சாரல் 
நாசியினை துளைத்து
தும்மலை தூவுது ....
அந்தியது வரைந்திடும்
வானவில்லின் வர்ணம்
விழிகளில் படர்ந்து
பார்வையினை கவருது ...
வீணை நரம்புகளின்
ரீங்கார சங்கீதம்
செவிப்பறையின் தொட்டிலை
இனிமையாய் தாலாட்டுது ....
தெவிட்டாத தித்திப்பில்
தமிழின் அமுதமது
குழைத்த கவிதைகள்
இனிப்பை சேர்க்குது ....
இறைவனை தொழுது
மனசை சுத்தமாக்கி
இறைஞ்சிடும் பிரார்த்தனை
மறுமைக்கு ஒளியாகுது ....
அப்துல் கபூர்

Abdul Gafoor

No comments: