Friday, October 21, 2016

சென்ற வருட குவைத் மழை ...

by.J Banu Haroon
சென்ற வருட குவைத் மழை ...
==================================
இன்று ,
மழைக்கு தயாராகி விட்டது வானம் ...
இரண்டு நாட்களாக இரவினில் சாரல் ...
விடிந்ததிலிருந்தே விடியற்காலை தான் ...
பட்டை தீட்டின வெயிலும் போச்சு ...
சூரியனையும் காணவில்லை ...
சந்திரனையும் காணவில்லை ....
இன்னும் இருட்டவில்லை ...தூரவில்லை ...
குடைகளை பத்திரப்படுத்துகிறேன் ....
வானமும் குடை பிடித்திருக்கிறது ....
பனிப்பொழிவுபோல் குளிர் நிறைக்கிறது ...
எப்போது பெய்யும் மழை ?....
அடிக்கடி அண்ணாந்து பார்க்கச் சொல்கிறது ...
சென்ற வருடம் ஐப்பசி இரண்டில் ..
ஆரம்பித்த அடைமழை ....
விடாது பெய்து எங்கும் நிறைத்தது ...
கடலூரை மூழ்கடித்து ....
போக்குவரத்தை துண்டித்து படுத்தியது ...
சென்னையை மூழ்கடித்து ...
எங்கும் போட் விட்டு அலைக்கழித்து ..
அமைதி தொலைக்க வைத்தது ...
நாங்களும் சென்னையில் தான் அப்போது ...

குவைத் செல்ல முதல் பயணம் டிசம்பர் 2...
எக்மோரில் ஹோட்டலை விட்டு ..
இரவு முன்னேறமே வெளியேற ..
வெளியே கனமழை கொட்டியது ....
திறந்து விடப்பட்ட செம்பரம்பாக்கம் ...
கரைபுரண்டு வர தப்பித்துப்போனோம் ...
ஆங்காங்கே மக்கள் கூட்டம் ...
குவிக்கப்பட்ட காவலர்கள் ...
தன்னார்வ தொண்டர் படைகள் ...
''இதென்ன ...உன்னுடைய முதல் பயணம்
இத்தனை திரில் நிறைந்ததாய் இருக்கு ...''என்றார் .
''செம திரில் ''என்றேன் ...
ஏற்கனவே இரண்டு மாதங்களாக ..
ஒரு வேலை காரணமாக சென்னை வாசம் ...
கிளம்பி ஊருக்கு போனால் போதும் ..
என்ற நிலையில் சென்னை திகட்டியது ...
ஏர்போர்ட் குளோஸ்டாம் ...பேசிக்கொண்டார்கள் .
''வெறும் ரூமராயிருக்கும் ''...என்றார் இவர் .
ஒன்னவர் பிரயாணத்திற்கு ...
தண்ணீரில் காரை போட் விட்டு ..
பிரயாணத்தை பலமணி நேரமாக்கி ..
போய் சேர்ந்தோம் ..அப்பாடா !...
'' நா போகச்சொல்றவரைக்கும்
இங்கேயே வெய்ட் பண்ணுப்பா ...
போர்டிங் பாஸ் வாங்கிட்டு ..
உனக்கு கால் பண்றேன் நீ போலாம் !..''
''சரிங் சார் ...''
வெளியில் காருடன் ட்ரைவர் காத்திருக்க ..
உள்ளே கவுண்டர்கள் காலி ...
ஊழியர்கள் யாருமே வரவில்லை ...
ஏர்போர்ட் குளோஸ்ட் ...விடிய விடிய ...
உள்ளே மாட்டிக்கொண்ட நாங்கள் ...
உட்காரவும் இடமில்லாமல் டிராலியில்
மாற்றி மாற்றி உட்கார்ந்து இரவை தள்ளினோம் ...
''ஹோட்டலுக்கே போயிடலாமே ...
இன்னொருநாள் மாத்தி வந்துக்கலாம் ...''
''போறதுக்கு வழியில்லை ..ஒரே தண்ணீர் ....
வரும்போது பார்த்ததேயில்லை ?..''
பிடித்துக்கொண்ட நாற்காலிகளை
எவரும் விடுவதாக இல்லை...
ஜனங்கள் அப்பிக்கொண்டிருந்தனர் ...
''இப்படி ஒரு நிலையை நான்
ஏர்போர்ட்டில் பார்த்ததேயில்லை''...என்றார் .
என்ன பெரிய ஏர்போர்ட் ?...
நான் முதன் முறையாக உள்ளே வந்ததே இப்போதுதான்...
கோயம்பேடு பஸ்டான்ட் மாதிரி கஜகஜான்னு ...
வெளியே கணக்கிலடங்காமல் வந்திருக்கிறேன்...
ஏற்றி விடவும் ,இறக்கி விடவும் ....
வெள்ளைக்காரர்கள் தரையில் அட்டைகளை
விரித்து போர்வை போர்த்தி அமைதியாக தூங்கி ..
காலையில் டைமுக்கு கண்விழித்து தயாரானார்கள் .
ஆங்காங்கே சான்டவிச்களும் ,பானங்களும் ..
அவரவர் ஆட்களுக்கு மட்டும் ...
நாங்கள் வெளியேற வேண்டும் ...
தூக்கமில்லாத கண்கள் எரிந்து தொலைந்தன ...
போர்த்தின புர்கா குளிரை தடுத்தது ...
விடியலில் மகனின் போன்கால் ...
''அம்மா ,என்ன பண்றே ?...
முதல் பயணமே போர் ...
''நா வீட்டுக்குப்போறேன் கண்ணு ...
''நியூஸ்ல பார்த்தேன் ...கொஞ்சம் வெய்ட் பண்ணு ...
அம்மா வெய்ட் பண்ணு ...ப்ளீஸ் ...''
''அத்தா ,ஆபீஸ்ல பேசிட்டு என்கிட்டே கொடுங்க ...
அவர் ஆபீசரிடம் பேசிவிட்டு ...
மகனும் பேச ...பேச...பேச...
வெளியில் போக பர்மிஷன் கிடைத்தது...
விடு ஜுட்ட்ட் ....
கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால்
ஹோட்டல்கள் நிரம்பி வழிந்தன ..
''அம்மா ,இப்போ கிளம்பி ஊருக்கு போய்டு !..''
3-ம் தேதி காலை ...''அப்பாடா ..''மூச்சு விட்டேன் ..
''ஈ டிக்கட் அனுப்பறேன் ...வீட்ல போய் கலெக்ட் பண்ணிட்டு
உடனே எர்லி மானிங் கிளம்பி பெங்களூர் வந்து..குவைத்
வந்திடலாம் ...''இந்தப்பையன் விடுவதாக இல்லை .
ரோடுகளில் வழிந்து எதிர்த்து வரும்
செம்பரம்பாக்கம் தண்ணீரில் சீறிப்பாய்ந்து
பல தடைகளை தாண்டி ...
கடலூரில் மூழ்க மூழ்க ...
வீடு வந்து சேர்ந்தோம் ...
வீட்டில் அதிர்ச்சியில் இருந்தனர் .
கொஞ்சம் தூங்கி ,குளித்து மறுபடியும்
கிளம்பி நின்றபோது அதிர்ச்சியில் உறைந்தனர் .
ட்ரைவர் ராஜி சாமர்த்தியசாலி ...
மனதார பாராட்டியே ஆக வேண்டும் ...
ஈ டிக்கட்டை கலெக்ட் பண்ணிக்கொண்டு ..
திருச்சி வழியாக பெங்களூர் பயணம் ...
வழியெங்கும் காய்ந்து கிடந்தது ...
சொட்டு மழையில்லை ...
வழியெங்கும் மழைக்கு ஏங்கிக் கிடந்தது .
4-ம் தேதி நள்ளிரவில் ...
குவைத் பிளைட்டில் உட்கார்ந்தாச்சு ..
5-மணி நேரம் எப்படிப்போகும் என்கிற கவலை எனக்குள் ..
காதுகளில் கவனமாக பஞ்சு வைத்து அடைத்துக்கொண்டேன் .
இவர் அலட்சியமாக சிரித்தார் ...
மெல்ல மெல்ல பயம் தெளிந்தது ...
இங்கேயெல்லாம் மழையில்லை ...என்றேன் .
சகஜ நிலைக்கு வர முயன்றேன் ...
குவைத்தில் இறங்கினதுமே அங்கே மழை..
கடந்த எட்டு வருடங்களாக இல்லாத மழையை
சென்னையிலிருந்து நாங்கள் கொண்டு வந்து விட்டோமாம் .
ஜயானாவை அணைத்ததும் ...
மெல்ல மெல்ல கஷ்டங்கள் மறக்க ஆரம்பித்தது ...
---- எல்லாம் வல்ல இறைவனுக்கு முதல் நன்றியை சொன்னேன் ...

J Banu Haroon

No comments: