Monday, October 24, 2016

மதவெறியோ துவேசங்களோ இல்லாத ஒரு நாடு.

பின்தங்கிய ஒரு நாடு, இன்னமும் பன்னாட்டு உதவிகள் கொண்டு பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் ஒரு நாடும் கூட, தலைநகரில் கூட உள்கட்டமைப்புக்கள் இன்னும் சரிவர உருவாக்க முடியாத ஒரு நாடு, என்றாலும்........
பெண்கள் எல்லாம் அதிகாலையிலும் நடு இரவிலும் சர்வ சாதாரணமாக சுதந்திரமாக தங்கள் பணி நிமித்தமும் இன்னமும் அவசர அவசியங்களுக்கு சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கும் காட்சி இங்கே மிக மிக சாதாரணம்.
தம்பி நஜீமுல்லாஹ்வின் இறப்புக்கு பிறகு இன்று சந்தித்த ஒரு கத்தோலிக்க பாதர்- என் கரங்களைப் பற்றி ஆறுதல் கொள்ளுமாறு பரிந்து பேசி, இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் என்று சொல்லி வைக்கிறார்.
ஆக, கற்பழிப்புக்களோ, பாலியல் வன்கொடுமைகளோ, மிக முக்கியமாக ஒரு நாட்டை முழுவதுமாக சீரழிக்கும் மதவெறியோ இல்லை துவேசங்களோ இல்லாத ஒரு நாடுதான் இந்த உகாண்டா, இப்படி இருப்பதால் நிச்சயம் இந்த நாடு முன்னேறத்தான் செய்யும் !

Raheemullah Mohamed Vavar
------------------------------------------------------------------------------
Picture source
Republic of Uganda உகாண்டா குடியரசு
தலை நகரம்  கம்பாலா
மக்கள் தொகை 35.6 மில்லியன்
பகுதி 93,072 சதுர மைல்
மொழிகள் ஆங்கிலம் (அதிகாரி), சுவாஹிலி (அதிகாரி), லுகாண்டா பல்வேறு பாந்து மற்றும் இதே போல் நைல் மொழிகள்
பெரிய மதங்களில் கிறித்துவம், இஸ்லாம்
ஆயுள் எதிர்பார்ப்பு 54 ஆண்டுகள் (ஆண்கள்), 55 ஆண்டுகள் (பெண்கள்)
நாணய உகாண்டா ஷில்லிங்
ஐ.நா., உலக வங்கி
Source

No comments: