Thursday, October 20, 2016

இருப்பும் பொழைப்பும் ....!

ரோமாபுரிக்குப் போனால் ரோமானியனாக இரு!
இது ஒரு சொல்வழக்கு, வேறொன்றும் இல்லை. இதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் ஒரு ஊருக்கு போனால் அங்குள்ள மக்களோடு அவர்களது கலாச்சாரத்தோடு ஒத்துப்போக வேண்டுமென்பதே யன்றி அவர்களைப் பற்றி குறை சொல்வதற்கல்ல.
எங்கெங்கே போனாலும் அங்கங்கே அப்படி அப்படி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமா?

எங்கே போனாலும் நாம் நாமாகவே இருப்பதுதானே உசிதம்!
ஆப்ரிக்காவில் வாழ்நாளின் பாதிக்குமேல் அங்கேயே வாழ்ந்துவிட்டாலும், அங்குள்ள மொழிகளை சரளமாக பேசிப் பழகினாலும் இந்தியர்கள், நான் உட்பட இந்தியர்களாகவே வாழுகிறோம்.
பிறந்த நாடும், ஊரும் உயிரோடு ஒன்றிப்போன ஒன்றாகும். என்னதான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று நம் மூதாதையர் சொல்லி சென்றிருந்தாலும் கேளிரும் ஒருநாள் சொந்த ஊருக்கு திரும்பிப் போயாகவேண்டும் என்பதை உணர்ந்தே சொல்லியிருக்க வேண்டும்.
இதுவே அரேபியா ஆனாலும் மற்றும் உலகின் எந்த பகுதியானாலும் பொருந்தும்.
இறைவன் மனிதனை பற்பல மொழிகளை பேசுபவர்களாகவும் கோத்திரங்களாகவும் படைத்தது 'வேற்றுமையிலும் ஒற்றுமை' காணவேண்டும் என்ற உன்னத தத்துவத்தின் அடிப்படியில் தான்.
அது சரி ....
இந்த ஆளு நாடு நாடாப் போயி அவங்களோடு செல்பி எடுத்து அந்த நாட்டுகாரங்களையும் இந்தியனாக மாற்றப் போறாராமா?
இந்தியாவுல இருக்கிறவங்களை சாதி மத வேறுபாடும் ஏற்ற தாழ்வும் இல்லாமல் 'வேற்றுமையில் ஒற்றுமை' காண வேண்டியன செய்யலாமே?
அதற்கான பொறுப்பையும் அதிகாரத்தையும் மக்கள் நம்பி தந்திருக்கிறார்களே?
செய்வார்களா ..... செய்வார்களா ....
தெரிஞ்சவங்க சொல்லுங்க ....
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: