உலக அளவில் இயங்கி வரும் கோ 4 குழு என்ற இனைய தள அமைப்பு சரவதேச அளவில் ஆண்டு தோறும் அறிவியல் திறமை, பொது அறிவு ஆகிய போட்டிகள் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவ மாணவியர்களுகாக நடத்தி வருகிறது. இதில் விண்வெளி அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நாசா அழைத்து சென்று அவர்களுக்கு உரிய உயர்தர பயிற்சிகள் அளித்து அத்துடன் விண்வெளி துறைகளில் வேலை வாய்ப்புகளையும் அமெரிக்காவில் நாசா நிறுவனத்தில் வழங்கி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச விண்ணொளி அறிவியல் தொடர்பான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி மாணவி பர்ஹானா வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்தால் தேர்வு செய்யபட்டு உள்ளார்.
குளச்சலை சேர்ந்த இந்த மாணவி தற்போது நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்வி படித்து வருகிறார். நாசாவால் தேர்வு செய்யபட்ட மாணவி பர்ஹானாவிற்கு கல்லூரி ஆசிரியர்கள் சக மாணவியர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். வரும் ஜூன் மாதம் மாணவியை அமெரிகாவின் நாசா நிறுவனம் என்னை அழைத்து அழைத்து செல்ல இருப்பதாக மாணவி பர்ஹானா மகிழ்சியுடன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தால் தேர்வு செய்யபட்ட முதல் மாணவி பர்ஹானா என்பது குறிபிடத்தக்கது.
விஷ்வல்; 1. மாணவி பர்ஹானா மற்றும் பயிற்சி அளித்த ஆசரியர்கள்.
2. கல்லூரி முதல்வர், தலாளார் உள்ளிட்ட ஆசரியர்கள் குழுவினர் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தல்.
3. பேட்டி; மாணவி பர்ஹானா ( நாசாவிற்கு தேர்வு பெற்ற மாணவி - நாகர்கோவில் )
No comments:
Post a Comment