Friday, March 27, 2020

துபை வாழ் நண்பர்களுக்கு, (நீங்கள் அறிந்திராத செய்தி)

கொரோனா வைரஸ் (#COVID19) தொற்று காரணமாக வார இறுதி நாள்களின் (வியாழன் முதல் சனி வரை) இரவு 8:00 மணி தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரையிலும், நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது நாம் அறிவோம், இதனால் வார இறுதி நாள்களான வியாழன், வெள்ளி & சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட/பயணிக்க அனுமதி இல்லை என்பதும் நாம் அறிந்ததுதான்.


ஆனால், தடை செய்யப்பட்ட நேரத்தில் ஏதும் அவசரமாகவோ அத்தியாவசியத்திற்காகவோ (உணவகம், மருத்துவமனை, மருந்தகம்) செல்ல வேண்டியிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியடியது கீழே கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும் வெப் சைட்டுக்குச் சென்று, உங்கள் மொபைல் எண் கொடுத்துப் பதிந்தால், OTP எண் கிடைக்கும். அந்த OTP எண் உதவியுடன் அடுத்த பக்கத்திற்குச் சென்று, உங்கள் பெயர், அடையாள அட்டை எண் (National ID OR Passport OR Driving License), வாகன எண், வெளியில் வரும் காரணம் மற்றும் இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரை என்ற கால அளவும் தெரிவித்தால், நமக்கு அனுமதியளிக்கும் குறுஞ்செய்தி நமது மொபைலுக்கு வரும்.

பாதுகாப்பிலிருக்கும் அதிகாரிகள் சோதிக்க நேர்ந்தால் இந்த குறுஞ்செய்தியைக் காண்பிக்க வேண்டும்.

பதிவு செய்யாத பயணங்கள் சட்ட விரோதமாகக் கருதப்பட்டு, உரிய சட்ட ரீதியான தண்டனைகள் கிடைக்கும்.

சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்துவோம்.

- Rafeeq Sulaiman

No comments: