கொரோனாவும் முககவசமும்
Dr.Vavar F Habibullahஇரண்டு நாட்கள் முன்பு ஒரு
பிரபல மருத்துவமனையின்
மானேஜிங் டைரக்டர், எனக்கு
போன் செய்து, “டாக்டர்,
எங்கள் மருத்துவமனைக்கு
ஒரு 50 பாக்ஸ் பேஸ் மாஸ்க்
வேண்டும்
இங்கே ஸ்டாக் இல்லை...
கேன் யூ கெட் மீ...வெரி
அர்ஜண்ட் டாக்டர் !”
நான் உடனே எங்கள்
மருத்துவமனை முன்னாள்
அட்மினிஸ்ட்ரேட்டரை
தொடர்பு கொண்டேன். அவர்
உடன், நாகர்கோவிலில் உள்ள
பிரபல மருத்துவ ஸ்டாக்கிஸ்டை
தொடர்பு கொண்டு பேசினார்.
‘பேஸ் மாஸ்க் அவைலபிள்
டாக்டர்.. ஆனால் ஒரு கண்டிசன்
ஒரு மாஸ்கின் விலை 20ரூபாய்
சொல்கிறான்.நூறு மாஸ்க் கொண்ட
ஒரு பாக்ஸ் விலை இரண்டாயிரம்
ஆகும்.அதுவும்,ஒன்லி கேஷ் பர்சஸிங்.
எவ்வளவு பெரிய ஹாஸ்பிடலாக
இருந்தாலும் கேஷ் பர்சஸ் தான்னு
சொல்றான்....
வாங்கி அனுப்பி வைக்கவா!’
(இந்த மாஸ்க், கொரோனா
பரவுவதற்கு முன் இருந்த
விலை வெறும் 2 ரூபாய் தான்.)
கோரோனாவை காரணம்
காட்டி தங்கள் பொருளாதா
ரத்தை மேம்படுத்த விளையும்
இது போன்ற பதுக்கல்
மருந்தகங்களை அரசு
கண்காணித்து தகுந்த
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment