Saturday, March 7, 2020

பெண்களுக்காக இவ்வளவு எழுதுவது ஆண்கள்தான் .

பெண்களுக்காக இவ்வளவு ஸ்டேடஸ் போடுவது ஆண்கள்தான் .
அதிலும் குறிப்பாக பெண்கள் தினம் என்று வரும்போது அதிகமாக இருக்கும்

ஆண்கள்தான் போட வேண்டும் அவர்கள்தானே இவ்வளவுகாலம் பெண்களை அடக்கி ஆண்டார்கள்

ஆனால் ஒன்று பெண்கள் ஆண்களை அடக்குவது மிகவும் கடுமையாக இருக்கலாம் !
மனைவியைவிட மக்களையே அதிகமாக நேசிப்பவன் தகப்பன்

வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த பாதுகாப்பு.
வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும்
பெண்களைப் போற்றாமல்
யாரைத்தான் போற்றுவது
போற்றாமல் வாரிசுகள் கிடைக்குமா


எத்தனை காலம்தான் உண்மையை மறைக்க முடியும்
உண்மை உயர்வானது ஒரு நாள் அது தன் நிலையை காட்டிவிடும்

மனைவியின் அருமை அறியாத கணவனால்
சிலர் வாழ்வு தகாத சிந்தனையால் சீர் கெடும்


பெண்கள் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள் .அவர்களது ஹார்மோன்ஸ் அவர்களுக்கு அவ்விதம் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணர்வுகளை உடனே வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பினும் அது அவர்கள் மனதில் தேக்கி வைக்கப்படுவதால் அது மேலோங்கும்போது அழுகையாக வந்துவிடுகின்றது. இதேநிலை கணவன் மனைவி உறவுக்குள்ளும் இருக்கின்றது.அவளது மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்டமாட்டாள். அதற்கும் கணவனது தூண்டுதல் அவசியமாகின்றது'
பெண்களை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் உலகில் அவளது உள்ளத்தின் அழகினை நேசிக்கத் தெரியாமல் இருப்பது கொடுமை. பெண்ணின் அழகு அவள் கண்களில் இல்லை அவள் உள்ளத்தில் இருக்கின்றது.பெண்ணின் கண்கள் அவளது மனதின் திறவுகோல். அவளது மனதை நேசிக்கத் தெரிந்துக் கொள்ளுங்கள் .யாரும் எக்காலத்திலும் எந்த பெண்ணும் அழுவதற்கு காரணமாகிவிடாதீர்கள் .
அன்புடன்,
------------------------------------------------------------------------------------------------
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்கவேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும்போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத்
-நபிமொழி

அல் குர்ஆனில் பெண்கள் (ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்)) என்று ஒரு பெரிய ஸூரா உள்ளது அதில்

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்(குர்ஆன். 4:7.)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23

பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அவர்களுக்கு அப்பொழுதே சொத்தில் உரிமையும் தரப்பட்டுள்ளது


இதுதான் பெண்ணின் பெருமை.
"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம் மூன்று பேரித்தம் பழங்கள் கொடுத்தேன். அத்தாய் தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம் கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று எடுத்து சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய் தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள்.

‘மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)

‘உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன். என்ற நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி

இறைவன் பெண்ணுக்கு பல உரிமைகள் கொடுத்தான் ஆனால் பெண் ஆசையை தூண்டுபவளாகவும்
கணவனிடமிருந்து கிடைப்பதை பங்கிட்டு உண்பவளானாலும் அதோ அதில் சிறிதை தன் பையில் சொருகிக் கொள்பவளாக இருக்கின்றாள் /இது அவ்வா வழி தொடர்வது

அல்லாஹ் ,நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நீங்களும் உங்களது மனைவியும் இந்த சொர்கத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் ஒரு மரத்தை சுட்டிக்காட்டி அல்லாஹ் இந்த மரத்தை நெருங்க வேண்டாம் என்று கட்டளை இட்டான் . அவ்வாறே அவர்களும் சிறிதுகாலம் சுகம் அனுபவித்தார்கள் பிறகு சைத்தான் தனது சூழ்ச்சியை அரங்கேற்றினான்.ஆனாலும் சைத்தான் சதி செய்து அவர்கள் இருவரையும் அந்தக் கனியைப் புசிக்க வைத்தான். அந்தக் கனியை உண்டவுடன் அவர்களது வெட்கத்தலங்கள் வெளிப்படையாயிற்று அவர்கள் இருவரும் சொர்கத்தில் உள்ள மரங்களில் உள்ள இலைகளை வைத்து அதனை மறைக்க முற்பட்டனர். இருவரும் ஒவ்வொரு மரமாகச் சென்று தம்முடைய உடலை மறைக்க இலை தருமாறு வேண்டினார்கள். .ஆனால் ஒரு மரமும் இலை தர மறுத்துவிட்டன.அவ்வப்பொழுது இறைவன் இருவரையும் பூமியில் இறக்கினான்.

குர்ஆன் வசனம்:
இதன்பின், சைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.(2:36.)

பெண்கள் அழுவதின் பொதுவான காரணங்கள் ...!

பெண்கள் ஏன் அழுகின்றனர்
கவலை கவ்வியதாலும் அல்லது நினைத்த காரியம் சாதிக்க வேண்டியும் இருக்கலாம்
உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!
அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!
தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!
தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா
அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா

ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றதா?
தான் எதிபார்த்த வாழ்வு கிடைக்க வில்லையே என நினைத்து அழுகிறார்களா.
தான் பாசம் காட்டி அன்போடு வளர்த்த பிள்ளைகள் அவர்கள் மனைவி வந்த பின் நம்மை மத்க்கவில்லையே என்பதனை நினைத்து அழுகின்றார்களா மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கமா
அழுதால்தான் தான் விரும்பியது கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அழுகின்றார்களா
தாழ்வு மனப்பான்மை மிகுந்ததால் அழுகை அவர்களை அறியாமல் வந்து விடுகின்றதா.
தன்மீது அபாண்டமாக அவதூறு சொல்வதால் மனம் வேதனையடைந்து அழுகின்றார்களா
"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23
தொட்டால் சிலுங்கி செடிபோல் எத்தனை தடவை தொட்டாலும் உணர்ச்சி மிகைவதால் அழுகையும் வந்து விடுகின்றதா
பத்துமாதம் வயிறில் குழந்தையை மகிழ்வாக சுமந்ததால் அப்பொழுது வரும் உடல் வேதனை அனைத்தையும் தாங்கிக் கொண்டதால் குழந்தை பெற்ற பின்பு அந்த இனிய சுமை போய் வீட்டின் சுமை தாங்கமுடியாமல் அழுகின்றார்களா .
நாம் பெண்கள் அழுவதற்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் இவைகள் அனைத்தும் உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் அழுவதை நிறுத்துவதற்கு மனதை கட்டுப்படுத்தினால் வீடே முன இருந்த அமைதி போய் சோகம் நிரம்பிவிடும், பெண்கள் அழுது அதன் காரணத்தினை சொல்லி நாம் அவர்களை ஆறுதல் வார்த்தை சொல்ல முற்படும்போது அவர்கள் மனத்தில் உண்டாகும் அமைதியால் அவர்களது முகத்தில் தோன்றும் புன்னகை நமக்கு எல்லையில்லா மகிழ்வைத் தரும், குடும்பம் என்பது இரண்டும் கலந்ததுதான். ஆண்கள் அழுவதனை அடக்குவதால் அது வெறித்தனமாக ஒரு நேரத்தில் வெளிப்படும், அவர்கள் மனதில் பெண்களைவிட கபடத் தன்மை அதிகம், அது அவன் மனதில் உள்ள கோபத்தின் தாபத்தை அதன் உண்மையை உடனே வெளிபடுத்தாது, காரியம் ஆகும்வரை அனைத்துவகை செயல்பாட்டிலும் ஈடுபடுவான். காரியம் முடிந்த பின்பு தனது வாக்குறிதியை காற்றில் பறக்க விட்டு விடுவான் . அது பெண்களிடம் இல்லை. நம்புவார்கள்,நம்பியது கிடைக்காமல் போக அதனை மனதில் அடக்கி வைத்திருந்து பின்பு அது கண்ணீர் மழையாக கொட்டி அடங்கும் , பாவம்! அவர்களை அழவாவது விடுங்கள், அந்த உரிமையாவது அவர்களுக்கு கிடைத்துவிட்டுப் போகட்டும்.
"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
பெண்கள் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள் .அவர்களது ஹார்மோன்ஸ் அவர்களுக்கு அவ்விதம் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணர்வுகளை உடனே வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பினும் அது அவர்கள் மனதில் தேக்கி வைக்கப்படுவதால் அது மேலோங்கும்போது அழுகையாக வந்துவிடுகின்றது. இதேநிலை கணவன் மனைவி உறவுக்குள்ளும் இருக்கின்றது.அவளது மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்டமாட்டாள். அதற்கும் கணவனது தூண்டுதல் அவசியமாகின்றது'
பெண்களை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் உலகில் அவளது உள்ளத்தின் அழகினை நேசிக்கத் தெரியாமல் இருப்பது கொடுமை. பெண்ணின் அழகு அவள் கண்களில் இல்லை அவள் உள்ளத்தில் இருக்கின்றது.பெண்ணின் கண்கள் அவளது மனதின் திறவுகோல். அவளது மனதை நேசிக்கத் தெரிந்துக் கொள்ளுங்கள் .யாரும் எக்காலத்திலும் எந்த பெண்ணும் அழுவதற்கு காரணமாகிவிடாதீர்கள் .
அன்புடன்,
முகம்மது அலி ஜின்னா.

No comments: