கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.
"பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம்," என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.
--------------------------------------------
லண்டனில் வசிக்கும் ஆக்கூர் மன்சூர் - கொல்லாபுரம் நஜ்மா ஆகிரியோரின் மகள் டாக்டர். ரிஸ்வியா மன்சூர், லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைர ஸால் பாதிக்கப்பபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment