Wednesday, March 11, 2020

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ் மாபி ஹல்பி ஹைருல்லா என்ற துவா பாடல் உருவாக்கிய விதம் பற்றி சிறு ஆய்வு

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்

மாபி ஹல்பி ஹைருல்லா என்ற துவா பாடல் உருவாக்கிய விதம் பற்றி சிறு ஆய்வு

வண்டலூரில் (கிரசன்ட்) பிறை பள்ளி ஒன்று உருவாக்கி அதில் மாணாக்கள் இறைவணக்க பாடலாக (துவா பாடல் ) பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது.
உடனே நாகூர் ஹனீபா அவர்களை அழைத்து ஐந்து மாணவர்கள அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள்.

“ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்திருக்கிறதாக வரலாற்று கூறுகிறது.


ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்

மாாபி ஹல்பி ஹய்ருல்லாஹ்

நூரு முஹம்மது சல்லல்லாஹ்

ஹக் லாயிலாஹா இல்லல்லாஹ்

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !

வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !

செம்மை பொழியும் சொர்கத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !

எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.
தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.
இன்ஷா அல்லாஹ் நாளை பார்ப்போம் .

Isai Murasu Haji Nagoor E.m.hanifa

No comments: