Abu Haashima
ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னால்
ஊருக்குள்ளே மோசமான நோய்கள் நடமாடிக் கொண்டிருந்தன.
வைசூரி
மன்னன்
பொக்கன்
மஞ்சள் காமாலை போன்ற
கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்து கொண்டிருந்தார்கள்.
பெரிய மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் மக்கள் மூலிகை வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் நான் இங்கே பதிவு செய்திருக்கும் முனாஜாத்துகளை
பள்ளிகளிலும் தர்ஹாக்களிலும்
மக்கள் கூடி இருந்து படிக்க ஆரம்பித்தார்கள்.
சில வசதியுள்ளவர்கள் ஆலிம்களையும்
நன்றாக இதைப் படிக்கத் தெரிந்தவர்களையும் அழைத்து
தங்கள் வீடுகளிலும் தெரு முற்றங்களிலும் உட்கர்ந்து படிக்க வைத்தார்கள்.
இறைவனுடைய நாட்டம் ...
கொஞ்ச நாட்களில் அந்த நோய்கள்
ஊரை விட்டு அகன்று விட்டன.
இந்த அபூர்வமான செய்திகளை
ஊரிலுள்ள பெரியவர்கள் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
தன்னிடம் நம்பிக்கை உள்ளவர்கள்
தன்னிடம் நம்பிக்கையோடு கேட்பதை
நிறைவேற்றி வைப்பவன்தானே
இறைவன்.
அன்றைய நாட்களில் அல்லாஹ்விடமே
மக்கள் மனமுருகி மன்றாடி உதவி கேட்டார்கள்.
அல்லாஹ்வும் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்
என்று மூத்த ஆலிம் பெருமக்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
என்றாலும் ...
அபூர்வமாக யாருக்காவது எப்போதாவது
இந்த ஸ்மால் பாக்ஸ் , சிக்கன் பாக்ஸ் , ஜான்டிஸ் போன்ற நோய்கள் வருவதுண்டுதான்.
இப்போதும்கூட இந்த முனாஜாத்தை
எங்கள் கோட்டாறு அப்துர் ரஹ்மான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின்
நினைவு நாளை முன்னிட்டு நடைபெறுகின்ற விழா நாட்களில்
படிப்பதுண்டு.
ஆண்டுதோறும் ஷஹ்பான் பிறை ஒன்று முதல் 15 வரை இஷாவுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Abu Haashima
No comments:
Post a Comment