எளிய_தமிழில் தந்தவர் Abu Haashima அவர்கள்
அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட
அழகான கண்கள்
யாருக்கும் இல்லை !
எந்தத் தாயும்
தங்களை விட
அழகானக் குழந்தையை
பெற்றதேயில்லை !
தாங்கள்
குறையே இல்லாமல்
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள்
எப்படிப் படைக்கப்பட வேண்டும்
என்று விரும்புவீர்களோ
அப்படி !
பெருமானே
எங்கள் நாயகமே...
தங்கள் புகழ்
இவ்வுலகில் பரவுகிறது
கஸ்தூரியை விட
அதிக நறுமணத்தோடு !
தங்கள் அதிர்ஷ்டம்
நிறைவானது !
தங்கள் கரம்
பெரும் கடலை விட
தாராளமானது !
தங்கள் தர்மம்
தடையின்றி ஓடும்
நதியைப் போன்றது !
தங்களைப் பார்த்துப்
பொறாமைப் படுபவர்கள்
பொறாமைத் தீயிலே
வெந்து கொண்டிருக்கிறார்கள் !
இவர்களை விட்டும்
இறைவன்
தங்களைப்
பாதுகாக்கட்டும் !
எங்கள் எஜமானரே...
தங்கள் தகுதிக்குத்
தகுமான அளவுக்குப்
புகழ் சேர்க்க
என்னால் இயலவில்லை !
நான் சொல்லாற்றலில் ஏழை !
ஏழை
எப்போதும்
தோற்று விடுகிறான் !
அண்ணலே
எங்கள் முஹம்மது ரஸூலே
என் கவிதைகள்
தங்களுக்கு
பெரும் புகழ் எதுவும்
சேர்த்து விடவில்லை !
தாங்கள்தான்
என் கவிதைகளுக்கு
என்றென்றும்
புகழ் நிலைக்கச்
செய்கிறீர்கள் !
#நபித்தோழர்_ஹஸ்ஸான்_பின்_தாபித் ( ரலி ) அவர்கள் ...
பெருமானார் ( ஸல் ) அவர்கள் முன்னிலையில் அவர்களைப் புகழ்ந்து பாடிய கவிதை.
#என்_எளிய_தமிழில்
" ரூஹுல் குத்ஸ் ( ஜிப்ரீல் ) அவர்கள் வழியாக உங்கள் கவிதைகளுக்கு அல்லாஹ் உதவி செய்வான் " என்று நபிகளாரால் அருளாசி வழங்கப்பட்டு ... பெருமானாரின் மேலாடையை பொன்னாடையாகவும் பெற்ற பெரும் கவிஞர் இவர் !
வானவனாம் அல்லாஹ்வும் அவன் அமரர்களும் வாழ்த்துக் கூறும் அண்ணல் நபி நாதருக்கு நாமும் கூறுவோம் மாண்பான வாழ்த்துக்கள் !
அஸ்ஸலாமு அலைக்க
யா ரசூலல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்க
யா ஹபீபல்லாஹ் !
Abu Haashima
No comments:
Post a Comment