Sunday, October 20, 2019

தேர்ந்தெடுத்த சட்டைக்கு சாதியுண்டோ மதமுண்டோ இனமுண்டோ....!!

நிஷா மன்சூர்

பஞ்சாப்பில் சீக்கிய விவசாயியால் விளைவிக்கப்பட்ட பருத்தி, கோயம்புத்தூர் ஸ்பின்னிங் மில்லில் உள்ளூர் ஒக்கிலிய கவுண்டர் சமூகத்து சிறுவனால் நூலாக்கப்பட்டுப் பின் சோமனூர் தறிப்பட்டறையில் அருந்ததிய இளைஞன் கையால் துணீயாக்கப்பட்டு ஈரோட்டுச் சலவைப்பட்டறையில் விவசாயம் நொடித்த கவுண்டர் சமூக பெரியவரால் சாயம் பூசப்பட்டு, ஆதரவற்ற பீகாரிய இளைஞனால் பேல் போடப்பட்டு பம்பாய் பனியா வியாபாரியால் கொள்முதல் செய்யப்பட்டு கொல்கத்தா முஸ்லீம் பெரியவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்களாதேஷில் இளமையிலேயே தாடிநரைத்த எளிய குடும்பத்தலைவனால் சட்டையாகத் தைக்கப்பட்டு பின் குடிசீரழித்த கணவனின் கவலை தோய்ந்த லட்சுமிபாயின் கரங்களால் அயர்ன் செய்யப்பட்டு மீண்டும் பம்பாயில் அஸ்லம் பாய் பில்டிங்கில் கடைவைத்திருக்கும் ராஜஸ்தானிய மார்வாரி வினியோகஸ்தர் மூலம் சுப்ரமன்ய அய்யர் மேலாளராகப் பணிபுரியும் மதுரையிலுள்ள குஜராத்தி மேமன் முசல்மான் கடையில் வில்லாபுரம் முத்துக்குமார் கரங்களால் விற்கப்பட்டு திண்டுக்கல் நாகல்நகர் குமாரசாமி தீபாவளிக்கு ரசித்துத் தேர்ந்தெடுத்த சட்டைக்கு சாதியுண்டோ மதமுண்டோ இனமுண்டோ....!!

#
நிஷா மன்சூர்

No comments: