Sunday, October 20, 2019

தலைமை பதவி அவருக்கு பணிவை தந்தது..எளிமையைக் கொடுத்தது..


Saif Saif
உமர்(ரலி) அவர்கள் இயல்பிலேயே கடின சுபாவமுடையவர்களாக இருந்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் வெகு காலம் வரை அதன் தாக்கம் நீடித்தது..

"பத்ரு போரில் நிராகரிப்பார்கள் பனுஹாஷிம்களை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள் அவர்களை கொன்று விடாதீர்கள்"

என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்..

அந்த நேரத்தில் அபூ ஹுதைபா என்ற சஹாபி..,


"யாரையும் நாங்கள் விட மாட்டோம்..பனூ ஹாஷிம் களுக்கு என்ன தனிச் சிறப்பு என்று கேட்டதோடு அப்பாஸ் வந்தாலும் வாளின் சுவையை உணர வைப்பேன்"

என்று வார்த்தையை விட்டு விட்டார்..

அந்த நேரத்தில் நபியுடனிருந்த உமருக்கு கடுமையான கோபம் கொப்பளித்தது.

அந்த சஹாபியை ஏதாவது செய்து விட நபியிடம் அனுமதி கேட்டு நின்றார்கள்..

நபிகள் அனுமதி கொடுப்பார்களா என்ன.!? மறுத்து விட்டார்கள்..

ஒருமுறை ஹாத்திப் இப்னு பல்தஆ என்பவர் அண்ணலரின் நடவடிக்கைகளை
குறித்து ரகசியமாக குறைஷிகளுக்கு ஓலை மூலம் தகவல் கொடுத்தனுப்பினார்..

அப்போது வெகுண்டெழுந்த உமர் கோபத்தில் அவரை வெட்டி போட தயாராக இருந்தார்..

அண்ணல் அப்போதும் அனுமதி வழங்கவில்லை..

பஸுல் குவைஸிரா என்றொருவர் நபியை பார்த்து வரம்பு மீறி பேசினார்..

அப்போதும் உமர் அவர்கள் சினத்தால் வாளை உருவினார்கள்..

அண்ணலார் வழக்கம் போல தடுத்தார்கள்..

இப்படி பல சந்தர்ப்பங்களில் உமரின் வாள் உறையை விட்டு வெளியே வரத் துடித்துக் கொண்டே தான் இருந்தது...

இதெல்லாம் உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று சாதாரணமாக நிலையில் இருந்த
போது தான்..

காலம் செல்லச் செல்ல உமரின் அந்த கோபம்
பக்குவமாக மாறி மென்மையானவராக நெகிழும் உள்ளம் கொண்டவராக மாறிக்கொண்டே இருந்தார்கள்..

கலீபா எனும் உயர் பொறுப்பில் வந்த பிறகு அந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை..

தலைமை பதவி
அவருக்கு பணிவை தந்தது..எளிமையைக் கொடுத்தது.. கோபத்தை துறக்க வைத்தது..

முஸ்லிம்களிடமும் திம்மிகள் எனும் காபிர்களிடமும், கிருஸ்தவர்களோடும் உயர்ந்த உள்ளத்தோடு பெருந்தன்மையாக
நடக்க வைத்தது..

உமர் அவர்கள் மரண படுக்கையில் இருந்த நிலையில் அவர்களுக்கு பின் கலீபாவாக
தகுதி பெற அலி, உஸ்மான்,தல்ஹா உட்பட ஆறு பேர்கள் தயாராக இருந்தும் அந்த பதவிக்கு யாரையும் சிபாரிசு செய்ய முன் வரவில்லை..

கலீபா பதவி எத்தனை சகிப்பு தன்மை வாய்ந்தது..
பொறுப்பானது..
நீதியானது..
எளிமையானது.. இறையச்சம் பொருந்தியது என்பதை உமர் அவர்கள் அனுபவ வாயிலாக அறிந்ததே அதற்கு முக்கிய காரணம்..

அன்று கலீபா உமர் அவர்கள் பதவியில் இல்லாத போது ஆக்ரோஷமாக சட்டென்று முடிவு எடுக்கும் ஒரு நிதானமின்மை அவர்களுக்கு இருந்தது உண்மை தான்..

கலீபாவாக தலைவரான பிறகு பொறுப்பையும், பணிவையும் அந்த பதவி அவருக்கு கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி,

ஆர்பாட்டமில்லாமல் சாதுர்யமாக யோசித்து முடிவுகள் எடுக்கும் நிதானம் வந்தது.. இறையச்சம் மிகுத்தது..

#பதவி இல்லாத போது அமைதியாக இருக்கும் இன்றைய மனிதர்கள்
அந்த பதவிக்காக 'அடி' வைத்து அந்த தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வதும் அது தன் கைவசம் வந்ததும் தன் நிலை மறந்து ஆர்ப்பாட்டமாக போடும் ஆட்டம் இன்றைய தலைவர்களுக்கு வந்த வாழ்வில் இறையச்சம் அறவே தொலைந்தே தொலைந்து போனது தான் இத்தனை பிரிவுகளுக்கும் காரணம் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது..

#இன்ஷா_அல்லாஹ் #இன்னும்_எழுதலாம்..

Saif Saif

No comments: