Monday, October 21, 2019

சாதனையாளர் விருது ....



சமீபத்தில் நிலவிய சந்திப்பில் உலவிய அன்பை நாட்டி விளைந்த நேசத்தை நீட்டி எனது நட்பு வளையத்தில் இணைந்தவர் அருமைக்குரிய சகோதரர்
Zakkir Hussain

குமரி மண்ணில் பிறந்து துபாய் தேசத்தில் தொழில் முனைவோரின் மத்தியில் சிறந்து விளங்கி இவரது நிறுவனத்தில் பணியாற்றி உழைப்பில் நனைவோரின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் ....


சனிக்கிழமை (19.10.2019) இரவு ஐக்கிய அரபு அமீரக தலைநகர் துபாயில் நிகழ்ந்தேறிய 'சித்திரை சர்வதேச வியாபார நிறுவனர்களின் சந்திப்பு' நிகழ்வில் தொழில் துறையில் முத்திரை பதிக்கும் 'Electro RAK' நிர்வாக இயக்குனர் ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது ....

தாம் நிர்வகிக்கும் தொழில்தனை பரிணாம வளர்ச்சியில் விரிவடையச் செய்து இன்னும் பற்பல சாதனை படைக்க மின்னும் மகிழ்வோடு வாழ்த்துகிறேன் ....

23.09.2019 திங்களன்று மாலையில் உகாசேவா மருத்துவமனைக்கு மரியாதை நிமித்தமாக விஜயித்து பின்னர் கவிச் செம்மல் Abu Haashima இல்லத்துக்கும் விஜயம் செய்து அளவளாவி நாகர்கோயிலின் பிரபல உணவகத்தில் எமக்கு இரவு விருந்து பரிமாறி உபசத்தவரான இவரின் விருது தொழிலக பயணத்தில் மைல் கல்லாய் அமையட்டுமாக ....

இறையருள் பெருகிட
உளமார்ந்த வாழ்த்துக்கள் ....


அப்துல் கபூர்
21.10.2019 ....

படம் கோர்ப்பு
அன்பிற்குரிய தோழர்

No comments: