Monday, October 21, 2019

Abu Haashima எழுதிய இந்தப்பாடலை இறையன்பன்_குத்தூஸ் அவர்கள் இசைபட பாடி இருக்கிறார்.

Abu Haashima


வருகிறது
#ரபிய்யுல்_அவ்வல்_வசந்தம் ...

#ஈமானின்_உணர்வை
#உயிருக்குள்_வார்த்து ...

நெஞ்சம் என்றும்
உம்மை தஞ்சம் கொண்டு வாழுமே
மஹ்ஷர் பெருவெளியிலும்
உங்கள் அன்பு காக்குமே
நெஞ்சம் என்றும்
உம்மை தஞ்சம் கொண்டு வாழுமே ..

மக்க நகர் அன்று
மண்வீசி வதைத்ததே
தாயிப் நகர் சென்றும்
கல்வீச்சு தொடர்ந்ததே
சென்ற இடம் எல்லாம்
ரத்தம் சிந்தும் உங்கள்
பொன்மேனி கண்டு
எம் நெஞ்சும் சாகும்
( நெஞ்சம் )


பெண் மகள் பிறந்தால்
மண்ணுக்குள் புதைக்கவே
பருவம் வந்த பின்னால்
விருந்தாக்கி புசிக்கவே
வெறிபிடித்தலைந்த
மிருகங்கள் மண்ணில்
இஸ்லாத்தை சொன்ன
எம்பெருமானே
( நெஞ்சம் )

இறையருள் மறையை
உலகுக்கு சேர்த்து
ஈமானின் உணர்வை
உயிருக்குள் வார்த்து
மரணித்து கிடந்த
மனிதரின் மனதில்
புனிதத்தை வளர்த்த
பூமான் நபியே ...
( நெஞ்சம் )

மதினாவில் வாழும்
சொர்க்கத்து நிலவே
மாண்புகள் தந்து
எமையாளும் அரசே
உங்கள் கரம் பிடித்து
இதயத்தைத் திறந்து
ஸலவாத்தை நாங்கள்
மொழிந்திட வேண்டும்
( நெஞ்சம் )

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ...

* "கண்கள் இரண்டும் உம்மைக் கொண்டு சேர்க்குமோ " என்ற
திரையிசைப் பாடலின் ராகத்தில் நான்
எழுதிய இந்தப்பாடலை
#இறையன்பன்_குத்தூஸ் அவர்கள்
இசைபட பாடி இருக்கிறார்.


No comments: