Sunday, October 20, 2019

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்கள்..

Saif Saif

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்கள்..

இவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகு "அல்லாஹ்வே உமரால் இஸ்லாத்திற்கு உயர்வை கொடு" என்று நபி(ஸல்) அவர்கள் கண்ணியம் செய்தார்கள்..

உமர் முஸ்லிம் ஆனபிறகு பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது..

கஅபாவைத் தவாஃப் செய்வதில் பிரச்சினை வந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது..

இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரி அபூஜஹ்லின் வீட்டு கதவை தட்டி..,

"நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மதையும் அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் நம்புகிறேன்"


என்று தைரியமாக சொல்லும் அளவிற்கு மன உறுதி உள்ளவர்களாக உமர் அவர்கள் இருந்தார்கள்..

பல சந்தர்ப்பங்களில் நபியவர்களுக்கு இவர் கூறிய ஆலோசனைகளை நபியவர்கள் ஏற்று செயல் படுத்தியிருக்கிறார்கள்..

சில நேரங்களில் உமர் சில விஷயங்களை சொல்லும் போது நபியவர்களுக்கு அது சம்பந்தமாக இறை வசனங்களையும் இறைவன் இறக்கி வைத்திருக்கிறான்.

அதுபோக நபிகளோடு நட்பாகவும் உரிமையோடும் உறவாடும் தகுதி உமருக்கு மிக அதிகமாகவே இருந்தது..

நபிகளின் காலத்திற்கு பிறகு அபூபக்கர் (ரலி) ஆட்சியில் செயல்
படுத்த பட்டு குர்ஆனை நூல் வடிவில் முழுவதுமாக தொகுத்தலில் உமரின் பங்கு அதிகமாக இருந்தது..

ஒரு சம்பவம்..,

நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டான்..

(உஹது போரின் போது 300 பேரை பாதி
வழியில் திருப்பி
கூட்டி வந்து விட்ட துரோகி. நபியின்
மனைவி மீது அவதூறு கூறியவன். உமரவர்கள் அவனை கொல்ல உத்தரவு கேட்டும் கடைசி வரை நபிகள் அவனுக்கு தண்டனைக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை.)

நபிகள் கருணையின் சிகரமல்லவா..உடனே ஜனாஸா தொழ வைக்க ஆயத்தமாகி விட்டார்கள்..

உமர் அவர்களுக்கு நபி(ஸல்) இப்படி செய்வது பிடிக்கவில்லை..

ஆனாலும் தயங்காமல் முனாஃபிக்கின் ஜனாஸாவிற்கு தாங்கள் தொழ வைக்கிறீர்களா..!?

என ஆட்சேபணை எழுப்பினார்கள்..

"(இனி) அவர்களில் எவரேனும் இறந்து விட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்.."(9:84)

என்ற இறை வசனத்தை இது சம்பந்தமாக தான் இறைவன் இறக்கி வைத்தான் என ஹதீஸ் வழி அறிய வருகிறது..

இப்படியான உமரின் பங்களிப்பை பற்றி வரலாற்று சம்பந்தமான நிகழ்வுகள் சில இருக்கின்றது..

இதில் பல விஷயங்கள் மிகுந்த ஆச்சர்யமாகவும், சில அறிவுபூர்வமாகவும் இருக்கிறது.. நாம் அறிய வேண்டிய விஷயங்களில் படிப்பினையும் இருக்கிறது..

காலமும், நேரமும் ஒத்துழைத்து
இறைவன் நாடினால் இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து எழுதலாம்

..Saif Saif

No comments: