Sunday, October 27, 2019

8 மில்லியன்முஸ்லிம்கள் /2260க்கும் அதிகமான இறை இல்லங்கள் பிரான்ஸை கவர்ந்திழுக்கும் இஸ்லாம்

பிரான்ஸ்பற்றி எழுத ஆரம்பிக்கும் போது முஸ்லிம்கள் ஆளாத இஸ்லாமிய நாடு பிரான்ஸ் என்று காலம் சென்ற இஸ்லாமிய பேரறிஞர் அஹ்மத் தீதாத் சொன்ன வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வருகிறது

அஹ்மத் தீதாத் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிரான்ஸ் சுற்று பயணத்தை முடித்து விட்டு அங்குள்ள முஸ்லிம்களின் நிலையையும் அரசின் நிலையையும் பார்த்து விட்டு கூறிய வார்த்தைகள் தான் அவை

ஒரு இஸ்லாமிய அரசு நடை பெற்றால் அங்கு எப்படி அனைத்து மதத்தவர்களும் சமமாக நடத்த படுவார்களோ அது போன்று பிரான்ஸ் மக்கள் நடத்த படுகின்றனர் என்ற கருத்தை தான் அவர் மேல் கூறிய வார்த்தைகளில் குறிப்பிட்டார்

அஹ்மத் தீதாத் எந்த மத சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சிறப்பித்து சொன்னாரோ அதே கருத்தை தான் கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்தார்
பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடு அனைத்து மதத்தவர்களையும் மதிக்கும் நாடு இந்த நாட்டில் அண்மை கால குடியேற்றங்களால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது



பிரான்ஸில் சுமார் 6 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ஒவ்வொரு மதத்தவரும் பிற மதத்தவரை மதிக்க வேண்டும்

சிலர்கள் இஸ்லாமியர்களை கண்டு அஞ்சுகின்றனர் அவர்களை தீவிரவாதிகளாக கருதுகின்றனர் உண்மையில் இந்த தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பது தான் உண்மை

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை நான் மதிக்கிறேன் அந்த பெண்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் இது போன்று ஒவ்வொரு பிரான்ஸ் நாட்டவரும் பிற மதத்தை மதிக்க வேண்டும்
அப்படி மதித்தால் தான் நமது நாடு ஒன்று பட்ட நாடக இருக்க முடியும்

இது கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் B.F.M. என்ற தொலைகாட்சி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு பிரான்ஸ்
=======================================
ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும் இந்த நாட்டில் கிருத்தவர்கள் பெருவாரியாக வாழ்ந்தாலும் நாட்டின் அரசியல் சாசனம் பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடென்று பிரகடனம் செய்துள்ளது

அனைத்து மதங்களையும் மதிக்கும் தன்மை கொண்ட நாடாக பிரான்ஸ் திகழ்கிறது பிரான்ஸ் மத சார்பற்ற நாடு என்பதால் அந்த நாட்டின் அதிகாரபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மதங்கள் பற்றியோ இனங்கள் பற்றியோ நிறங்கள் பற்றியோ கேள்வி எழுப்ப படுவதில்லை

இப்படி கேள்விகள் அரசு சார்பில் எழுப்ப படுவதை அந்த நாடு மனித உரிமை மீறலாக கருதுகிறது
ஆயினும் வேறு சில நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்புகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை என்ன என்பது உறுதி படுத்த பட்டிருக்கிறது

பல நிறுவனங்கள் பல கணக்குகளை சொன்னாலும் அவைகளில் இருந்து நமக்கு கிடைக்கும் இறுதி தகவல் பிரன்ஸ் நாட்டில் முஸ்லிம் களின் சதவீதம் 5 இல் இருந்து 10- வரை என்பதாகும்

சில நிறுவனங்கள் முஸ்லிம்களின் சதவீதம் 12.7 க்கும் அதிகம் என்ற தகவலையும் பதிவு செய்தள்ளது
சுமார் 66 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பிரன்ஸில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 8.5 மில்லியன் என்ற ஒரு தகவலும்

6 மில்லியன் என்ற மற்றொரு தகவலும் உள்ளது
மொத்தத்தில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் பிரான்ஸில் திகழ்கிறது

யூதர்கள் மற்றும் இதர கிருத்துவ பிரிவினர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட மிக மிக குறைவாகும்

இங்கு ரோமன் கத்தோலிக்கர்களின் சதவீதம் 88 ஆகும்

பிரான்ஸில் வாழும் முஸ்லிம்களில் 82 சதவீதம் முஸ்லிம்கள் மொரோக்கோ வம்சாவழியை சார்ந்தவர்கள் இவர்கள் தவிர மற்றவர்கள் அல்ஜீரியா” துருக்கி மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளை சார்ந்தவர்கள்

கடந்த காலங்களில் பிரான்ஸ் கிருத்துவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களி்ன் எண்ணிக்கை இரண்டு இலட்சம் என்று கணக்கிட படுகிறது

பிரான்சுக்கு .இஸ்லாத்தின் வருகை
=============================
பிரான்ஸ் தற்போது இருக்கும் இதே அமைப்பில் 7 ஆம் நூற்றாண்டில் இருக்கவில்லை
அன்றைய பிரான்ஸ் செப்டிமேனியா மாகாணம். அக்விடைன் மாகாணம். புரோவென்ஸ். பர்கண்டி பிரதேசம் என பல பெயர்களில் சிறு துண்டுகளாக பிரிந்து கிடந்தது ஹிஜ்ரி 100-102 ஆகிய கால கட்டத்தில் இஸ்லாமிய தளபதி ஸம்ஹா பின் மாலிக் ஹவ்லானி செப்டிமேனியா மாகாணம் முழுவதையும் வென்று எடுத்து அங்கு இஸ்லாமிய அரசை நிறுவினார்
செப்டிமேனியா மாகாண தலைநகரான அர்புனாவில் தனது படை தளத்தை நிறுவிய ஸம்ஹா பின் மாலிக் ஹவ்லானி அக்விடைன் மாகாணம் உள்ளிட் பல பகுதிகளை வென்றெடுத்தார்

பிரான்ஸ் போரில் மூழ்கியிருந்த கால கட்டத்திலேயே அங்கு நடந்த போர் ஒன்றில் ஸம்ஹா பின் மாலிக் ஹவ்லானி வீர மரணம் அடைந்தார்

அன் பிறகு அப்து ரஹ்மான் ஹாபிக் அவர்களின் தலைமையில் அப்பகுதயில் போர் நடை பெற்றது
உமையாக்களின் படை தளபதிகளில் ஓருவர் அன்பஸா பின் சஹீம்
தனது பெரும் படையோடு பிரான்ஸை நோக்கி சென்று அங்கு குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பெரும் வெற்றியை பெற்றார்

யசீத் பின் அப்துல் மலிக் அவர்களின் காலத்தில் பிரான்ஸை நோக்கி படையை நகர்த்திய அன்பஸா பின் சஹீம் பிரான்ஸின் 70% நிலபரப்புகளை வென்றெடுத்தார் பிரான்ஸின் 70% நிலங்களில் இஸ்லாமிய அரசை நிறுவினார்

பிரன்ஸின் தலை நகர் பாரிஸிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்ஸ் நகர் வரையிலும் இவரது படை சென்று அந்த பகுதிகளை தனது கட்டு பாட்டிற்குள் கொண்டு வந்தது
பிரான்ஸில் வென்றெடுத்த பகுதிகளில் தனது பிரதிநிதியை நியமித்துவிட்டு அவர்அன்துலுசியா திரும்போது ரோன் நதிக்கரையில் நடை பெற்ற போரில் ஹிஜ்ரி 107 ஆண்டு வீர மரணம் அடைந்தார்

பிரான்ஸை அலங்கரிக்கும் இறை இல்லங்கள்
================
பிராஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் வழிபாடுகளை நடத்துவதற்க்காக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிர கணக்கான இறை இல்லங்களை அமைத்துள்ளனர்

தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சுமார் எழுபது முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் உட்பட நாடு முழுவதும் 2260 இறை இல்லங்கள் அமைந்துள்ளன
நன்றி https://www.facebook.com/SYEDALIFAIZI/posts/1677485542382908?__tn__=K-R

No comments: