Wednesday, October 9, 2019

நூறாண்டுகளைக் கடந்து மங்காத பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும் மில்லி கிராம் மெட்டல் பாக்ஸ்

மயிலாடுதுறை அருகே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மிகக் குறைவான எடையில் தயாரிக்கப்பட்ட மெட்டல் பாக்ஸ் இன்றளவும் மங்காமல் உள்ளதால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூர் பகுதியை சேர்ந்தவர் அமினுல்லா. இவர் தனது மூதாதையர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிக சிறிய மெட்டல் பாக்ஸ் ஒன்றை பாதுகாத்து வருகிறார். இந்த மெட்டல் பாக்ஸ் குளோரின், காப்பர், கார்பன், நிக்கல் சிங், அயன், சிலிக்கான் பொட்டாசியம், அலுமினியம் உட்பட சுமார் 20 மூலப்பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. 14.7 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த மெட்டல் பாக்ஸ் 4 சென்டி மீட்டர் நீளமும் 3.75 சென்டி மீட்டர் அகலமும் உள்ளது. வெள்ளி நிறத்தில் காணப்படும் இந்த மெட்டல் பாக்ஸ் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இன்றளவும் அதன் நிறம் மங்காமல் இருப்பதை உணர்ந்த அமினுல்லா அதனுடைய சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளும் நோக்கோடு சென்னையிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழக உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல்துறையில் ஆய்விற்காக அனுப்பி அதனுடைய ஆய்வறிக்கையையும் பெற்றுள்ளார். இதேபோல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மெட்டல் பாக்ஸ்ன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனுடைய அறிக்கைகளையும் பத்திரமாக வைத்துள்ளார்.
மேலும் படிக்க http://mayilaiguru.com http://mayilaiguru.com/2019/10/08/met...

No comments: