Tuesday, October 15, 2019

பாவம் செய்த பின்..........

பாவம் செய்த பின்..........
**********************************
 Kaniyur Ismail Najee Manbayee
சற்று முன் அரபி மொழி ட்விட்டரில் படித்தேன்.
"நீ ஒரு பாவம் செய்த பின் உன் உள்ளத்தில் ஒரு வகையான குற்ற உணர்ச்சி ஏற்பட்டால் சந்தோஷப்படு.
ஏனென்றால்,
உன் உள்ளத்தில் ஈமானின் ஒளி இருக்கிறது.
அது தான் உன் உள்ளத்தின் இருண்ட பகுதியை சுட்டி காட்டுகிறது".

இதனை படித்த பொழுது,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகளிடம் ஒரு மனிதர் வந்து, "நபி அவர்களே! ஈமான் என்றால் என்ன?" என்று கேட்டார். (அவர் கேட்டது ஈமான் இருப்பதற்கான அடையாளத்தை)

அதற்கு,
"நீ செய்த நல்லவைகள் உனக்கு மகிழ்ச்சியை தரும் என்றால், நீ செய்த தீயவைகள் உன் உள்ளத்தில் வேதனையைத் தரும் என்றால் நீ ஒரு முஃமீன் என்றார்கள்",
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அந்த மனிதர் மீண்டும்,
பாவம் என்றால் என்னவென்று கேட்டார்.
"நீ ஒரு செயலை செய்யும் முன் எது உன் உள்ளத்தை உறுத்துகிறதோ (தடுமாற செய்கிறதோ) அது பாவம். அதை விட்டு விடு." என்றார்கள்
(நூல்: அஹ்மது)
யா அல்லாஹ்! நல்லவைகளை நல்லவையாக தீயவைகளை தீயவைகளாக எனக்கு காட்டுவாயாக!
எங்களின் உள்ளங்களில் ஈமானின் ஒளியை ஏற்றுவாயாக!
ஆமீன்.

Kaniyur Ismail Najee Manbayee

No comments: