Vavar F Habibullah
தகுதி, திறமை,முயற்சி
ஆர்வம் இருந்தால் எங்கும்
எதிலும் வெற்றி பெற இயலும்
என்பது எழுபது வயதான
இந்த பெரிய மனிதரின்
வாழ்க்கை அநுபவம்.
திருச்சியை சார்ந்த இவர்
இளமையிலேயே தந்தையை
இழந்தவர்.சாதாரண குடும்ப
பிண்ணனி கொண்ட இவர்
கல்வியில் மிகச் சிறந்த
மாணவர். நல்ல மதிப்பெண்
பெற்றிருந்தும் இவர் சார்ந்த
மைனாரிட்டி கல்லூரியான
திருச்சி ஜமால் முகமது கல்லூரி
இவருக்கு தனது கல்லூரியில்
பியூசி அட்மிசன் வழங்க
மறுத்து விட்டது. ஆனால்
திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரி இவரது மதிப்பெண்களை
பார்த்து தகுதி அடிப்படையில்
அட்மிசன் வழங்கியது.
அதே கல்லூரியில் தகுதி
அடிப்படை யில் மட்டும்
மேல் கல்வியை தொடர்ந்த
அவர், எம்எஸ்ஸி படிப்பில்
முதன் மாணவராக தேர்வானார்.
குடும்ப நிலையை கருத்தில்
கொண்டு முஸ்லிம்களுக்கான
ஜமால் முகமது கல்லூரியில்
ஒரு டுயூட்டர் வேலைக்கு
அப்ளை செய்தார்.கல்லூரி
நிர்வாகம் நிராகரித்து விட்டது.
ஆனால் புகழ்பெற்ற
திருச்சி செயின்ட்
ஜோசப் கல்லூரி அந்த
தவறை செய்யவில்லை.
ஜூனியர் லெக்சரர் ஆக
பணியில் சேர்ந்த அவர்,
பின்னாளில் செயின்ட்
ஜோசப் கல்லூரியின்
பாட்டனித் துறை பேராசிரியர்
மற்றும் ஹெச்ஓடி ஆக நாற்பது
வருடங்கள் பணி புரிந்து ஓய்வு
பெற்ற கதையை சொன்ன போது
மைனாரிட்டி முஸ்லிம் கல்லூரி
களின் மனிதாபிமானம் மிகவும்
தெளிவாகவே புரிகிறது.
பேராசிரியர் அப்துல் காதர்
ஒரு கல்லூரியை திருச்சியில்
துவங்கும் அளவுக்கு பொருள்
வசதி மிக்கவராக இப்போது
திகழ்வது காலம் நிகழ்த்திய
சாதனை என்றே சொல்ல
வேண்டும்.
ஐம்பது வருடங்களுக்கு
முன் நடந்த சம்பவமே
இப்படி என்றால்....
இப்போது நிலைமை எப்படி
இருக்கும் என்பதை எவரும்
சொல்ல வேண்டியதில்லை.
தகுதி அடிப்படையில் மட்டுமே
தங்கள் கல்வித்தரத்தை
வளர்த்துக் கொண்ட அவரது
பெண் மக்கள் மூவர்
அமெரிக்காவில் இப்போது
பெரிய பதவிகளில்
இருக்கிறார்கள்.
அமெரிக்காவில்
கோப்பெல் நகரில் ஒரு
நண்பரின் வீட்டில்
பேராசிரியரை சந்தித்த போது
அவர் சொன்னார்...
இடஒதுக்கீட்டை மட்டும்
நம்பாமல் தகுதி திறமையை
வளர்த்து கொண்டால் உலக
பல்கலைக்கழகங்களே நம்
மாணவர்களை இரு கரம் நீட்டி
வரவேற்கும்.
பேராசிரியர் குடும்பமே
இதற்கான நல்ல எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment