Friday, September 13, 2019

டெக்சாஸ் மாகாணம்

by.Dr.Vavar F Habibullah
டெக்சாஸ் மாகாணம்
அமெரிக்காவின் ரிபப்ளிகன்
கோட்டை.அதிக கிருத்துவர்
நிறைந்த மாகாணம் இது.
பைபிள் பெல்ட் என்பது
இதன் சிறப்பு பெயர்.
ஜார்ஜ் புஷ் குடும்பம்
இங்கு தான் வசிக்கிறது.

இந்து,முஸ்லிம்,யூத,புத்த,
சீக்கிய சீன குடும்பங்கள்
இங்கு பெருவாரியாக உள்ளன.
மத ஒற்றுமைக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும் சிறப்பு
மாநிலம் இது.



ஈஸ்ட் பிளானோவில்
பிரமாண்டமாக அமைந்த
EPIC மசூதி இங்கு மிகவும்
புகழ்பெற்ற ஒன்று.
பதினைந்து ஏக்கர்
நிலபரப்பில் அமைந்த
இந்த பள்ளிவாசல்
பதினைந்து மில்லியன் டாலரில்
கட்டப்பட்டது என்பது சற்று
வியக்க வைக்கிறது.

மதரஸா,பாடசாலை,நவீன
ஜிம்,விளையாட்டுத் திடல்
பாஸ்கட் பால் கோர்ட்,
ஆடிட்டோரியம்,ஷாப்பிங்
காம்ப்ளக்ஸ் என்று மஸ்ஜித்
வளாகம் பரந்து விரிகிறது.

இன்று காலை ஆறு மணிஅளவில்
(ஏழேகால் மணிக்குத் தான்
இங்கு சூரியன் உதயமாகிறது)
பஜர் தொழுகைக்காக அங்கு
சென்றேன். இந்த காலை
வேளை தொழுகையில்
ஐநூருக்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டது மிகவும்
ஆச்சரியமாக இருந்தது.

மக்கா மாநகர்
பள்ளிவாசல்களில் கூட
பஜர் தொழுகையில்
இத்துணை மக்கள் கூட்டத்தை
நான் பார்த்தது இல்லை.
மஸ்ஜித் சிறப்பு நிகழ்ச்சிகளில்
மாற்று மத சகோதரர்கள்
தங்கள் குடும்பத்துடன்
பெரிய அளவில் பங்கேற்று
சிறப்பு செய்வது ஒரு அற்புதம்
நிறைந்த அதிசயமாகும்.
இவர்களின் மத ஒற்றுமை
என்னை வியக்க வைக்கிறது.

திரு குர்ஆனில் என்னை
கவர்ந்த ஒரு வசனம்!
I don’t worship
what you worship
You don’t worship
what I worship
To you your religion
To me my religion
உனக்கு உன் மதம்
எனக்கு என் மதம்
என்பதே இஸ்லாம்
போதிக்கும் மத நல்லிணக்க
சித்தாந்தம் எனும்போது
மெய் சிலிர்க்கிறது.



Dr.Vavar F Habibullah

No comments: