Tuesday, September 17, 2019
நாம் தமிழர்!
Vavar F Habibullah
நேற்று, ஒரு நண்பரின் வீட்டு
ஹவுஸ் வார்மிங் நிகழ்ச்சிக்கு
என்னை அழைத்திருந்தார்கள்.
பங்ஷன் முடிந்து வெளியே
வரும் போது ஒரு சிலோன்
நண்பர் அறிமுகம் ஆனார்.
பெயர் கலீல் என்று
நினைக்கிறேன்.
இலங்கை தமிழர்.
தமிழர் என்பதில் மிகுந்த
பெருமை.கல்லூரி முதல்வர்.
இப்போது அமெரிக்காவில்
செட்டில் ஆகி விட்டார்.
இலங்கையின் சரித்திரத்தை
பத்து நிமிடத்தில் விவரித்த
விதம்... அவர் ஒரு சிறந்த
சரித்திர பேராசிரியர்
என்பதை நிரூபித்து விட்டது.
சிங்களத் தமிழன்,
சிங்கப்பூர் தமிழன்,
பர்மா தமிழன்,
மலேசியத் தமிழன்,
இந்தோனேசியத் தமிழன்
ஹாங்காங் தமிழன்,
பேங்காங் தமிழன்,
என்று தமிழ் இனம் பிரிந்து
கிடந்தாலும் தமிழ் மொழியால்
இணைந்து இருப்பது வேறு எந்த
மொழியும் பெற்றிராத பேறு என்று
அவர் சொன்ன போது தமிழகத்தை
தாண்டியும் தமிழோசை ஒலிப்பது
கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
உலகில் பரந்து கிடக்கும்
தமிழ் இனம் மட்டுமே
தாய்த் தமிழ் தவிர
தான் சார்ந்து வாழும்
பிற நாடுகளின் மொழிகளையும்
கற்று தேர்ந்து அதன் மூலம்
தமிழ் மொழி வளர்ச்சிக்கு
உதவும் வகையில் செயல்
பட்டு வருகிறது.ஹார்வாடு
ஸ்டான்போடு,ஆக்ஸ்போர்டு
கேம்பிரிட்ஜ் பல்கலை
கழகங்களில் தமிழ்
இருக்கைகள் அமைய
இந்த வெளி வாழ் தமிழினமே
காரணம்.
உலகத் தலைவர்கள்
பெரும்பாலானோர் ஆங்கிலம்
அறியாதவர்களாகவே உள்ளனர்.
ஐரோப்பிய,ரஷ்ய தலைவர்களும்
இதில் அடக்கம்.தங்கள் நாட்டு
மொழி தவிர ஆங்கிலத்தில்
உரையாடுவது இல்லை.
வாரம் ஒருமுறை இலங்கை
தமிழர் கூடும் அவைகளில்
ஆங்கிலம் அல்லது பிற மொழி
கலவாத சுத்த தமிழை தொடர்ந்து
பத்து நிமிடம் பேசும் பேச்சாளர்
களுக்கு நூறு டாலர்களை
பரிசாக வழங்கி ஊக்கம்
தருகிறோம் என்று அவர்
சொல்வதைக் கேட்க சற்று
வியப்பாக இருக்கிறது.
தமிழ் நாட்டு தமிழர்கள்
இவர் சொல்வதை....
(பிற மொழி கலவா
செந்தமிழை பேசுவதை)
ஏற்பர்களா என்பது
தெரியவில்லை.
டிஜிடல் டிரேன்ஸ்லேட்டர்
சாபட்வேர் மூலம் உலகில்
எந்த மொழியில் பேசினாலும்
தமிழில் எளிதில் புரிந்து
கொள்ள இயலும்.இனிமேல்
வரும் காலங்களில் எந்த
மொழியையும் எவர் மீதும்
திணிக்கும் அவசியம் வராது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment