Mohamed Ali ....
எனது நட்பு வளையத்தில் வளைய வரும் 82 வயது முதியவர் முகம்மது அலி அவர்கள் மயிலாடுதுறை என்கிற மாயவரம் நகரின் நீடூரை பிறப்பிடமாக வாழ்பவர் ....
கல்வியில் சட்டம் பயின்று படடம் பெற்ற வழக்கறிஞராகிய இவர் முகநூல் வட்டம் உள்ளமர்ந்து நட்பின் விட்டம் தொட்டு கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் போன்ற திறமையெனும் ஆடைகளை அணிந்த பன்முக நட்புகளை தன்னுள் ஈர்த்தவர் ....
அரசியல் பொதுவாழ்வு போன்ற நிகழ்காலத்தின் சில பிரபலங்கள் இவரது வகுப்புத் தோழர்கள் என்பது சுவாரசியமான தகவல் ....
இவரது நட்புகளாகிய நானும் மற்றும் பிறரும் தத்தமது சிந்தனையில் படுகிற எண்ணங்களால் இடுகிற சிறந்த பதிப்புகளை வாசித்ததும் அவைகளை விடுகிற மனமில்லாமல் தனது நீடூர் வலை தளத்தில் பதிவிட்டு எம்மை உலகமறிய வைப்பவர் மட்டுமல்ல உலக தேசங்களின் ஆயிரக்கணக்கான நண்பர்களை இவ்வலை தளம் உள்ளடக்கியது என்பதும் சிறப்பம்சம் ....
பாரம்பரிய வசதியான குடும்பத்தை சார்ந்த இவர் கால்கள் பதிக்காத உலக நாடுகளை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வற்றி விடாத சுறுசுறுப்போடு பெரும்பாலான தேசங்களை சுற்றிப் பார்த்தவர் ....
கர்வம் இல்லா இந்த மூத்த குடிமகனை நேரில் சந்திக்கும் ஆர்வம் எமக்குள் ஊடுருவி ஊஞ்சலாடியது ....
நான் மற்றும்Mohamed Kaffoor Hidayathun Nayeem ஆகிய மூவரும் அண்மையில் தஞ்சை மாவட்ட பேராவூரணி செல்லுகையில் இவரோடு அலைபேசியில் உரையாடி எமது விஜயம் குறித்த முக்கிய விஷயம் சொல்லி அவைகளை முடித்ததும் உங்களை சந்திக்கிறோம் என்றதும் அவர் பிரகாசமாய் உற்சாகமானார் ....
செவ்வாயன்று மதியம் 2:00 மணிக்கு நேரில் சந்திந்து கட்டித் தழுவியதும் முதியவரான அவரை மகிழ்வுக் காற்று தாலாட்ட ஓர் இளைஞனாக அவர் மாறிய தருணத்தில் கைகள் குலுக்கி சிரிக்க அவர் மீது நாம் அன்பை சரிக்க பினனர் அவரோ நெகிழ்வோடு நம்மை உபசரிக்க வானமும் மழை சொரிந்தது ....
அடுத்து அவரது மகனின் உணவகத்தினுள் உணவு வகைகளை உண்டாட அவரின் முகத்தில் ஆனந்த வண்டாட அதை நாம் கண்டாட அவரின் வாழ்வில் மறக்க இயலாத நாள் என்பதையும் பெருவாரியான மைல்கள் கடந்து தம்மை உளமார சந்திந்தது நீங்களே என்றும் எமக்கு உணர்த்தினார் .....
தமது அனுபவங்கள் நாட்டு நடப்புகள் போன்ற விஷயங்களை பதிவிடுகிற இந்த மனிதரின் இல்லத்தில் நாம் நுழைந்ததும் தமது குடும்பங்களை முகம் புன்னகைக்க எமக்கு அறிமுகம் செய்து உரையாடினார் ....
Raheemullah Mohamed Vavar
Abu Haashima போன்ற நண்பர்களை விசாரித்து அவர்களுக்கு சலாம் சொன்னார் ....
இந்த மாயவரம் மனிதருக்கு சுகமான ஆரோக்கிய வரம் தந்து நீண்ட ஆயுளையும் வல்லோன் இறைவன் நல்குவானாக ....
அப்துல் கபூர்
19.09.2019 ....
No comments:
Post a Comment