Hidayathun Nayeem
அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தை வைத்து நம்மை அரவணைத்து வாழச்செய்து கொண்டிருக்கிற வல்லவனுக்கே வான்புகழ்.
வரலாற்று நினைவுச்சின்னம் "மனோரா" என்ற மினார். ஆம், எழில்மிகு கிழக்கு கடற்கரை சாலையில் அதிராம்பட்டினத்திற்கும் சேதுபாவாசத்திரத்திற்கும் இடையில் சரபேந்திரா ராஜபட்டினத்தில் அமைந்துள்ள இந்த வரலாற்று நினைவு கோபுரம், கிபி 1814 ல் மாவீரன் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயனுக்கும் நடந்த யுத்தத்தில் ஆங்கிலேயன் வெற்றி பெற்றான்.
அதன் நினைவாக தஞ்சை மராட்டிய மன்னன் சரபோஜி கட்டியது தான் இது.
எட்டு அடுக்குகள் கொண்ட 75 அடி உயரம் கொண்ட அறுகோண வடிவத்தில் எழுப்பப்பட்ட இக்கோபுரத்தை சுற்றிலும் அகழியும், கலைநயமிக்க சுற்று சுவரும், நம் முன்னோரின் கட்டிட கலைக்கு சிறந்த ஆதாரமாக திகழ்கிறது என்றால் மெய்யே.
பார்த்து ரசிக்க சந்தர்ப்பம் தந்த இறைவன் ஒருவனுக்கே அனைத்து புகழும்.
No comments:
Post a Comment