Monday, September 16, 2019

நானும் இந்தியும்

Dr.Vavar F Habibullah

 ·
நானும் இந்தியும்

இடலாக்குடி அரசு உயர்நிலைப்
பள்ளியில் நான் படித்த நேரம்...
இந்தி எங்களுக்கு ஒரு பாடமாக
இருந்தது.இந்தி ஆசிரியர் மிகவும்
நல்லவர்.என்றாலும் அவர் வகுப்புக்குள்
வரும் முன்பே பலகையில்
இந்தி ஒழிக என்று
எழுதி வைப்பது எனது வழக்கம்.
இதற்காக அவர் என்னை
ஒருபோதும் தண்டித்தது இல்லை.

இந்த இந்தி எதிர்ப்பு உணர்வு
கல்லூரி படிப்பு முடியும் வரை
ஏன்...இன்று வரை, என்னில்
தொடர்வது ஏன் என்பது
எனக்கும் புரியவில்லை.


நான் சென்னையில் இருந்த
போது, ‘பீடியாட்ரிக் மற்றும்
அடோலசன்ட் சைக்கலாஜி’
துறை ஒன்றை மக்கா மாநகரில்
அமைந்த ஆசியன் பாலி
கிளினிக்கில் துவங்க இருப்பதாக
கூறி என்னை அழைத்தார்கள்.
மக்கா என்பதால் நானும் மிக
ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.

ஆசியன் கிளினிக் என்பதால்
இந்தியா,பங்களாதேஷ்,பர்மா,
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்
லண்டன்,அமெரிக்கா மற்றும்
இந்தி பேசும் இண்டர் நேஷனல்
பேசியண்ட்ஸ் அங்கு அதிகம்
வருவதுண்டு.

இந்தியை அங்கு
இந்தியர்களை தவிர மற்ற
நாடுகளை சார்ந்தவர்களே
அதிகம் பேசுவது எனக்கு
வியப்பாக இருந்தது.
வட இந்தியன் போல்
தோற்றம் தரும் பாகிஸ்தான்
காரனே மக்காவிலும்,
மதீனாவிலும் இந்தியை
மிகவும் அழகாக பேசுகிறான்.

தமிழனுக்கு, வட இந்தியனும்
பாகிஸ்தானியும் ஒன்று போல்
தான் காட்சி தருகிறான்.அவன்
அவர்களோடு ஒருபோதும்
ஒட்டுவதும் இல்லை.
உறவாடுவதும் இல்லை.
தமிழனுக்கு இந்தியும் வராது
உருதுவும் பேச வராது.
மதம் ஒன்றானாலும்
தமிழனுக்கும் அவர்களுக்கும்
இடையே மொழி, நிற, இன
கலாச்சார வேறுபாடு மிகவும்
அதிகம் இருக்கிறது.

எனக்கு ஸ்பெசலாக ஒரு
இந்தி மொழி பெயர்ப்பாளரை
(translator) நியமனம் செய்தார்கள்.
இந்தியில் பேஸியண்ட்ஸ்
களுடன் உரையாடுவது எனக்கு
தர்ம சங்கடமாக இருந்தது.
அவர்களுக்கு ஆங்கிலம் அறவே
புரிவதில்லை.உம்ரா வரும் உயர்
மட்ட, படித்த அரபிகள் நன்றாக
ஆங்கிலம் பேசுவார்கள்.எனவே
ஆங்கிலம் அறிந்த ஹைகிளாஸ்
பேசியண்ட்ஸை மட்டும் எனக்கு
அனுப்பி வைத்தார்கள்.இந்தி
ஒரளவுக்கு தெரிந்தாலும் அதை
பேசுவதை நான் முழுமையாக
விரும்பவில்லை.மெடிக்கல்
டைரக்டருக்கும் எனக்கும் இது
விசயத்தில் கருத்து மோதல்
ஏற்பட்டது.

முடிவு....பத்து வருட
காண்ட்ராக்டை தொடர
விருப்பம் இல்லை என்று
மறுத்துவிட்டு ராஜிநாமா
செய்த என் முடிவை மறு
பரிசீலனை செய்ய
மானேஜ்மெண்ட் வற்புறுத்தியும்
நான் அதை ஏற்கவில்லை.
இந்தி படித்த இந்தியனாக
இருப்பதை விட தமிழ் அறிந்த
தமிழனாய் இருப்பதே என்
போன்றோருக்கு பெருமை.

No comments: