Abu Haashima
வயதான தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்தார். மகன் அங்கே நின்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பறவை அங்கு வந்தது.
தந்தை கேட்டார் . மகனே அது என்ன?
தந்தையே அது காகம்
சிறுது நேரம் சென்றது.
மீண்டும் தந்தை கேட்டார். மகனே அது என்ன?
தந்தையே அது காகம் என்று இப்போதுதானே சொன்னேன்.
தந்தை அமைதியாகஇருந்தார்.
சிறுது நேரம் சென்றதும் மீண்டும் அது என்ன என்று கேட்டார். இப்போது மகன் பொறுமை இழந்தான்.
தந்தையே அது ஒரு காகம் என்று உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுவது.
தந்தை அமைதியாக வீட்டினுள் எழுந்து சென்றார். ஒரு 'டைரி'யை எடுத்து வந்தார். அதில் ஒருப் பக்கத்தை பிரித்து மகனிடம் காட்டினார். அதில் இப்படி எழுதப் பட்டிருந்தது.
" இன்று என் சிறு வயது மகன் ஒருக் காகத்தை பார்த்து அது என்ன என்று என்னிடம் குறைந்தது பத்து முறையாவது கேட்டிருப்பான். ஒவ்வொரு முறையும் அது காகம் என்று நான் சொன்னேன். எனக்குக் கோபம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் அந்த சிறு குழந்தையின் மீது அன்பு அதிகரித்தது"
படித்துப் பார்த்த மகன் கண்களில் கண்ணீர். கருணையுடன் தந்தையை நோக்கினான்.
........ Mohamed Faize .....
No comments:
Post a Comment