Tuesday, September 17, 2019

அந்த மொழி இருக்கா ?

#காதலின்_மொழி_எது ?

ஆறு அறிவுள்ளவனுக்கு
ஆறு மொழி தெரியணும்னா
ஏழாம் அறிவு படத்தை எடுத்த
முருகதாசுக்கும் அதில் நடித்த சூர்யாவுக்கும் ஏழு மொழி தெரியுமா ?
அந்தப் படத்தை பார்க்கிறவனுக்காவது
ஏழு அறிவு உண்டா ?
ஏழு மொழிதான் தெரியுமா ?
ஏழு அறிவு இல்லேன்னா
அந்தப் படம் எப்படிடா புரியும் ?
என்னடா குழப்புறீங்க ?


ராமன் மிதிலை நகருக்கு வரும்போது வீதிகள்ல மக்கள் கூடி நின்னு வரவேற்கிறாங்க.
ஆகா ... ராமன் எவ்வளவு அழகா இருக்காருன்னு ஆச்சர்யப்படுறாங்க.
சீதையும் அரண்மனை மாடத்தில் நின்று
ராமனின் அழகை கண்களால் பருகுகிறாள்.
ராமனின் விழிகளும்
சீதையின் விழிகளும் தழுவிக் கொள்கின்றன.
அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்
அப்புறம் என்னாச்சு ?
நம்ம இசையமைப்பாளர் தேவா பாட்டாவே சொல்லிட்டாரு .
" கண்ணும் கண்ணும் ஒட்டிகிச்சு
காதல் வந்து பத்திகிச்சு
டாவு டாவு டாவுடா
டாங்கு டாங்கு டய்யிடா ..."
அந்த விழிகள் பேசிய பாஷை
என்ன பாஷை ?
காதல் பாஷை.
காதலுக்கு ஏதுடா மொழி ?
அது எட்டாவது மொழியா
பத்தாவது மொழியா ?
அதையெல்லாம் புரிஞ்சுக்குறதுக்கு
கல்யாணம் காட்சின்னு ஏதாவது
நடந்திருக்கணும்.
நாமதான் சாமியாராச்சே.

விடு ...
பச்சக் குழந்தை இருக்கே பச்சக் குழந்தை .
அது பசித்தால் அழும்.
அழுகை ஒண்ணுதான் அதுக்குத் தெரிந்த பாஷை.
அந்த அழுகை என்ன பாஷை ?
அமெரிக்க தாய்க்கும்
அரபி தாய்க்கும்
இங்கிலாந்து தாய்க்கும்
இந்திய தாய்க்கும்
உலகத்திலுள்ள எல்லா தாய்களுக்கும்
அர்த்தம் தெரிந்த பாஷை அது.
குழந்தைக்கு பசிக்குது.
பால் கொடுக்கணும் என்பதுதான் அது.
உடனே குழந்தையை எடுத்து
மாரோடு வச்சுக்குவா.
அதனாலதான் தாய்களை
தாய்மார்கள்னு சொல்றோம்.
நான் என்ன கேக்குறேன்னா
பிறக்கிற குழந்தை ஆறு மொழியை
கத்துகிட்டு வந்தா பால் கேக்குது ?

சரி விடு ..
வாயுள்ளவன் பேசுவான்
காதுள்ளவன் கேட்பான்.
இந்த இரண்டும் இல்லாத எத்தனையோ
பேரு பேசுறதை கேட்டிருக்கியா ?
கையாலயே பேசுவான்.
அவங்க நாலஞ்சு பேரு கூடி நின்னு
பேசுவதை கேட்கவே கலையாக இருக்கும்.
ஓசைகளற்ற இனிய சங்கீதம் அது .
அவங்களுக்கு தெரிந்த அந்த மொழி
எத்தனையாவது மொழி ?
உனக்குத் தெரிந்த ஆறு மொழிகள்ல

சரி இதையும் விடு ...
இந்தி இந்தின்னு மந்தி மாதிரி
கத்திட்டிருக்கிற மந்திரிக்கும்
ஆறு அறிவு இருக்குன்னு நம்புவோம்.
அவரு தமிழ் மொழில பேசுவாரா ?
பேசமாட்டாருன்னா
அவருக்குத் தெரிஞ்ச ஆறு மொழி என்னன்னு சொல்லு பார்ப்போம்.

தமிழனெல்லாம் இந்தி பேசணும்னு
சொல்றவங்க ஏண்டா தமிழ் பேசக் கூடாது ?
அவன்தான் வட நாட்டுக்காரன் .
இந்தி அவன் தாய் மொழி.
அவன் தாயை அவன் உயர்வா பேசுறதுல தப்பில்லே.

அடேய் மூதேவிகளா ...
தமிழ் தாய்க்குப் பிறந்த நீங்க
ஏண்டா பெத்த தாயை சவுட்டித் தள்ளிட்டு
மாற்றான் தாயை தூக்கி தலையில வச்சு கூத்தாடுறீங்க ?
தாய்நாட்டை நேசிப்பதற்கு முன்னால்
தாயை நேசிக்கப் பாருங்கடா .
#தாயென்பவள்_தமிழ் !

Abu Haashima

No comments: